
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. மும்பை வான்கடேவில் நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன.
சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து தோனி விலகியதால் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணியும் நாளை(26ம் தேதி) மும்பையில் மோதுகின்றன.
இந்த போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய இருவரும் இறங்குவார்கள். 3ம் வரிசையில் நிதிஷ் ராணாவும், 4ம் வரிசையில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் ஆடுவார்கள். விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ். 6 மற்றும் 7ம் வரிசைகளில் ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரும் ஆடுவார்கள். அதிரடி பேட்ஸ்மேனான ஆண்ட்ரே ரசல் கேகேஆர் அணியின் ஃபினிஷர் ரோல் வகிப்பார். அதிரடியாக பேட்டிங் ஆடக்கூடிய சுனில் நரைன், ஆட்டத்தின் சூழலை பொறுத்து இறக்கிவிடப்படுவார்.
சுனில் நரைனுடன் வருண் சக்கரவர்த்தி மற்றொரு ஸ்பின்னராக ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக ஷிவம் மாவி, உமேஷ் யாதவ் மற்றும் சாமிகா கருணரத்னே ஆகிய மூவரும் ஆடுவார்கள். இப்போதைக்கு பாட் கம்மின்ஸ் இல்லாததால் கருணரத்னே ஆடுவார். கம்மின்ஸ் அணிக்குள் வந்துவிட்டால், அவர் தான் ஆடுவார்.
ரசல், நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா என கடும் அதிரடி பேட்டிங் ஆர்டரை பெற்றுள்ளது கேகேஆர் அணி.
உத்தேச கேகேஆர் அணி:
வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், சாமிகா கருணரத்னே, ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.