IPL 2022: கேகேஆருக்கு எதிரான போட்டிக்கான ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Mar 25, 2022, 09:05 PM IST
IPL 2022: கேகேஆருக்கு எதிரான போட்டிக்கான ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் முதல் போட்டியில் கேகேஆரை எதிர்கொள்ளும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. மும்பை வான்கடேவில் நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன.

ஐபிஎல் 15வது சீசனுக்கு முன்பாக தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அனி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ருதுராஜ் கெய்க்வாட்டுடன் நியூசிலாந்து அணியின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டெவான் கான்வே தொடக்க வீரராக இறங்குவார்.

3 மற்றும் 4ம் வரிசைகளில் முறையே சீனியர் அதிரடி வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் அம்பாதி ராயுடு ஆகிய இருவரும் இறங்குவார்கள். 5ம் வரிசையில் கேப்டன் ஜடேஜாவும், 6ம் வரிசையில் தோனியும் ஆடுவார்கள். ஆல்ரவுண்டர்கள் ஷிவம் துபே, ட்வைன் பிராவோ ஆகியோரும், ஃபாஸ்ட் பவுலர்கள் ஆடம் மில்னே மற்றும் இந்தியாவை சேர்ந்த துஷார் தேஷ்பாண்டே ஆகிய இருவரும் ஸ்பின்னராக ஜடேஜாவுடன் இலங்கையுடன் மஹீஷ் தீக்‌ஷனாவும் ஆடுவார்கள்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ட்வைன் பிராவோ, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா, ஆடம் மில்னே.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!