காஞ்சிபுரத்தில் வேத பாடசாலை மாணவர்களுடன் இணைந்து கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர் வெங்கடேஷ் ஐயர். இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய அவர், மொத்தமாக ஒரு சதம் மற்றும் 2 அரைசதம் உள்பட 404 ரன்கள் குவித்துள்ளார்.
நார்வே சர்வதேச செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திய குகேஷிற்கு முதல்வர் பாராட்டு!
இதுவரையில் 36 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 956 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் சதம் அடித்ததன் மூலமாக கேகேஆர் வீரர் பிரெண்டன் மெக்கல்லத்திற்குப் பிறகு முதல் கேகேஆர் வீரராக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இந்த சீசனில் அதிகபட்சமாக 104 ரன்கள் வரையில் எடுத்துள்ளார்.
ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் சிவம் லோககரே!
ஆனால், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த கேகேஆர் 7ஆவது இடம் பிடித்து ஐபிஎல் 16ஆவது சீசனிலிருந்து வெளியேறியது. 16ஆவது ஐபிஎல் சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது விடுமுறையை கழித்து வருகிறார். வெங்கடேஷ் ஐயர் தமிழ்நாடு காஞ்சிபுரம் கோயில் வளாகத்தில் வேத பாடசாலை மாணவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும், தவறான தகவலை பரப்பாதீர்கள்: சாக்ஷி மாலிக்!
அதில் அவர் கூறியிருப்பதாவது: "விளையாட்டின் மீதான காதல் நம்பமுடியாதது. காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து இளம் வேதா பாடசாலை மாணவர்களுடன் ஒரு சிறந்த நேரம் இருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.