IPL 2023: தரமான ஆல்ரவுண்டரை KKR-க்கு தாரைவார்த்த டெல்லி..! ஏலத்திற்கு முன்பே வீரர்களை வாரிக்குவிக்கும் கேகேஆர்

By karthikeyan VFirst Published Nov 14, 2022, 4:29 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக டிரேடிங் முறையில் கேகேஆர் அணி மற்ற அணிகளிடமிருந்து தங்களுக்கு தேவையான வீரர்களை வாரிக்குவித்துவருகிறது. ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸிடமிருந்து 2 வீரர்களை வாங்கிய கேகேஆர் அணி, டெல்லி கேபிடள்ஸிடமிருந்து ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரை வாங்கியுள்ளது. 
 

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. கடந்த சீசனில் 2 அணிகள் புதிதாக அறிமுகமானதால் கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்தது. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கிறது.

அடுத்த சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடக்கிறது. அதற்கு முன்பாக ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை தயார் செய்து ஏலத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பதால், அனைத்து அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் கழட்டிவிட்ட மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம்

அந்தவகையில், அனைத்து அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்துவருகின்றன. அதற்கு முன்பாக டிரேடிங் முறையில் அணிகளுக்கு இடையே வீரர்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

இந்த சீசனுக்கான முதல் டிரேடிங் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி இடையே நடந்தது. ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய ஃபாஸ்ட்பவுலர் ஜேசன் பெஹ்ரண்டார்ஃபை மும்பைஇந்தியன்ஸ் அணி வாங்கியது.

அதைத்தொடர்ந்து கேகேஆர் அணி குஜராத் டைட்டன்ஸிடமிருந்து 2 வீரர்களை வாங்கியது. ஏற்கனவே தங்கள் அணியில் ஆடிய நியூசிலாந்து ஃபாஸ்ட்பவுலர் லாக்கி ஃபெர்குசனை குஜராத் டைட்டன்ஸிடமிருந்து வாங்கியது கேகேஆர். அவருடன் ஆஃப்கான் விக்கெட் கீப்பர் -பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸையும் கேகேஆர் வாங்கியது.

இப்போது டெல்லி கேபிடள்ஸ் அணியிடமிருந்து ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரை வாங்கியுள்ளது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி. கடந்தசீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.10.75 கோடி என்ற பெரும் தொகையை கொடுத்து ஷர்துல் தாகூரை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. கடந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல் தாகூர், 138 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 120 ரன்கள் அடித்தார்.

IPL 2023: ஏலத்துக்கு முன் முதல் டிரேடிங்.. ஆர்சிபியிடமிருந்து ஆஸி., ஃபாஸ்ட் பவுலரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

ஷர்துல் தாகூர் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை செய்யக்கூடிய ஆல்ரவுண்டர். பவுலிங்கில் அணிக்கு தேவையான போதும், களத்தில் நன்றாக செட்டில் ஆன அல்லது முக்கியமான பெரிய விக்கெட்டை வீழ்த்தக்கூடிய பவுலர் ஷர்துல் தாகூர். ஷர்துல் தாகூர் சாமர்த்தியமாக பந்துவீசக்கூடிய பவுலர் மட்டுமல்லாது, பேட்டிங்கில் முக்கியமான கேமியோ செய்யக்கூடிய பேட்ஸ்மேனும் கூட. 
 

click me!