T20 WC: ஷாஹீன் அஃப்ரிடி பந்து வீசியிருந்தாலும் இங்கிலாந்து தான் ஜெயித்திருக்கும்! உண்மையை உரக்க சொன்ன கவாஸ்கர்

By karthikeyan V  |  First Published Nov 13, 2022, 9:48 PM IST

டி20 உலக கோப்பை ஃபைனலில் இங்கிலாந்துக்கு எதிராக காயம் காரணமாக ஷாஹீன் அஃப்ரிடி 2 ஓவர்கள் வீசமுடியாமல் போனது. ஒருவேளை அஃப்ரிடி அந்த 2 ஓவர்களை வீசியிருந்தால் பாகிஸ்தான் ஜெயித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஒரு கருத்து நிலவும் நிலையில், அதற்கு வாய்ப்பேயில்லை. அஃப்ரிடி பந்துவீசியிருந்தாலும், இங்கிலாந்துதான் கோப்பையை வென்றிருக்கும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 


தொடர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இன்று மெல்பர்னில் நடந்த ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக வென்றது.

மெல்பர்னில் நடந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20  ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் ஷான் மசூத் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடி 38 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் யாரும் சரியாக பேட்டிங் ஆடாததால் 20 ஓவரில் வெறும் 137 ரன்கள் மட்டுமே அடித்தது பாகிஸ்தான் அணி.

Tap to resize

Latest Videos

undefined

138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ்(1), ஜோஸ் பட்லர் (26), ஹாரி ப்ரூக் (20) ஆகியோர் ஏமாற்றமளித்தாலும், பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று நிதானத்தை கையாண்டு பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை ஜெயித்து கொடுத்தார். 19வது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இதற்கு முன் 2010ல் பால் காலிங்வுட் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வென்றது.

டி20 உலக கோப்பை: தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரன்! 8 வீரர்களை ஓரங்கட்டி சாம் கரன் விருதை வெல்ல இதுவே காரணம்

இங்கிலாந்து அணி இலக்கை எளிதாக விரட்டிவிடவில்லை. மற்ற வீரர்கள் எல்லாம் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவரும் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷாவின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தான் ஆடினார். ஆனால் இலக்கு குறைவானது என்பதால் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு விக்கெட்டை மட்டும் விட்டுக்கொடுக்காமல் தட்டுத்தடுமாறி ஆட்டத்தை எடுத்துச்சென்றார். 

13வது ஓவரில் ஹாரி ப்ரூக்கின் கேட்ச்சை பிடிக்கும்போது ஷாஹீன் அஃப்ரிடியின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் களத்தைவிட்டு வெளியேறினார். அவர் களத்தை விட்டு வெளியேறும்போது, எஞ்சிய 7 ஓவர்களில் 2 ஓவர்கள் அவருக்கு மீதமிருந்தது. லேசான காயம் தான் என்பதால் அவர் சிறிய சிகிச்சைக்கு பிறகு திரும்பி வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் கழட்டிவிட்ட மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம்

அவர் களத்தைவிட்டு வெளியே சென்ற பின், 14 மற்றும் 15வது ஓவர்களை நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகிய இருவரும் அபாரமாக வீசி நம்பிக்கையளித்தனர். 14வது ஓவரில் நசீம் ஷா வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 15வது ஓவரில் ஹாரிஸ் ராஃப் 8 ரன் கொடுத்தார். அந்த 2 ஓவரில் மொத்தமாகவே இங்கிலாந்துக்கு 10 ரன்கள் மட்டுமே கிடைக்க, 15 ஓவரில் இங்கிலாந்து அணி 97 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 5 ஓவரில் 41 ரன்கள் இங்கிலாந்துக்கு தேவைப்பட்டது. கடைசி 5 ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடிக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தது. அவர் அந்த 2 ஓவரை வீசியிருந்தால் ஆட்டமே மாறியிருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் அந்தளவிற்கு நெருக்கடியை உருவாக்கியிருந்தனர். ஆனால் 16வது ஓவரை வீசவந்த ஷாஹீன் அஃப்ரிடி, முதல் பந்தை மட்டும் வீசிவிட்டு வலியால் மீண்டும் பெவிலியன் திரும்பினார். அதனால் எஞ்சிய 5 பந்துகளை வேறு பவுலர் வீச நேர்ந்தது. அந்த 5 பந்துகளை இஃப்டிகார் அகமது வீச, அந்த 5 பந்தில் பென் ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்க, ஆட்டம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு கைமாறியது.

முகமது வாசிம் வீசிய அடுத்த ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகள் அடிக்க, இங்கிலாந்துக்கு இலக்கை விரட்டுவது எளிதானது. கடைசியில் 19வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஒருவேளை ஷாஹீன் அஃப்ரிடி அந்த 2 ஓவர்களை வீசியிருந்தால் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் நெருக்கடியை அதிகப்படுத்தி வெற்றியை சாத்தியமாக்கியிருக்கக்கூடும் என பாகிஸ்தான் ரசிகர்கள் நம்புகின்றனர். ஷாஹீன் அஃப்ரிடி காயமடையாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் தான் ஜெயித்திருக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.

ஆனால் இலக்கு எளிதானது என்பதால் தான் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடினார். 138 ரன்கள் என்ற இலக்கை, விக்கெட்டை இழக்காமல் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றாலே வெற்றி பெற்றுவிடலாம் என்பதால் தான் ஸ்டோக்ஸ் அவசரப்பட்டாமல் ஆட்டத்தை எடுத்துச்சென்றார். அதனால் அவர் மந்தமாக ஆடினார். ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீசியிருந்தால் பாகிஸ்தான் ஜெயித்திருக்கும் என்று கூறமுடியாது என்பதுதான் உண்மை.

IPL 2023:அவர் எங்க ஆளு; எங்களுக்கே கொடுத்துருங்க! குஜராத் டைட்டன்ஸிடமிருந்து 2 வீரர்களை கேட்டு வாங்கிய கேகேஆர்

அதைத்தான் சுனில் கவாஸ்கரும் கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ஷாஹீன் அஃப்ரிடி காயமடையாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் ஜெயித்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அந்த 15-20 ரன்கள் குறைவாக அடித்துவிட்டது 155-160 ரன்கள் அடித்திருந்தால் ஜெயித்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஷாஹீன் அஃப்ரிடி அந்த 2 ஓவர்களை வீசியிருந்தால் இங்கிலாந்தின் இன்னொரு விக்கெட்டை வீழ்த்தியிருக்கலாமே தவிர, இங்கிலாந்துதான் ஜெயித்திருக்கும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!