டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து, ஃபைனலில் தோற்ற பாகிஸ்தான், அரையிறுதியில் தோற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் என எந்தெந்த அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்பட்டது என்ற விவரத்தை பார்ப்போம்.
டி20 உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. டி20 உலக கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் தொடரைவிட்டு வெளியேறியது.
அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்தும் ஃபைனலுக்கு முன்னேறின. மெல்பர்னில் நடந்த ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.
undefined
இதற்கு முன் 2010ல் பால் காலிங்வுட் கேப்டன்சியில் டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, 2வது முறையாக இப்போது டி20 உலக கோப்பையை வென்றது. 2 முறை டி20 உலக கோப்பையை வென்ற 2வது அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்தது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை டி20 உலக கோப்பையை வென்றது.
இந்த டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.13 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. டி20 உலக கோப்பை வின்னர் இங்கிலாந்து, ரன்னர் பாகிஸ்தான், அரையிறுதியில் தோற்று வெளியேறிய இந்தியா, நியூசிலாந்து அணிகள் உட்பட ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை விவரங்களை பார்ப்போம்.
டி20 உலக கோப்பை வின்னர் இங்கிலாந்து - ரூ.13 கோடி
ரன்னர் பாகிஸ்தான் - ரூ.6.5 கோடி
அரையிறுதியில் தோற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் - ரூ.3.25 கோடி
ஆஸ்திரேலியா, அயர்லாந்து - ரூ.1.5 கோடி
தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் - ரூ.1.20 கோடி
வெஸ்ட் இண்டீஸ், நமீபியா, யு.ஏ.இ, ஸ்காட்லாந்து - ரூ.64.40 லட்சம்