IPL 2023:அவர் எங்க ஆளு; எங்களுக்கே கொடுத்துருங்க! குஜராத் டைட்டன்ஸிடமிருந்து 2 வீரர்களை கேட்டு வாங்கிய கேகேஆர்

By karthikeyan VFirst Published Nov 13, 2022, 5:31 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸிடமிருந்து 2 வீரர்களை டிரேடிங் முறையில் கேகேஆர் வாங்கியுள்ளது.
 

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடக்கவுள்ளது. கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்ததால், இந்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. எனவே ஐபிஎல் அணிகள் விடுவிக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டன.

அதற்கு முன்பாக, அணிகளுக்கு இடையே வீரர்கள் டிரேடிங் முறையில் வீரர்களை பரிமாற்றிக்கொள்ளலாம். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய இருபெரும் சாம்பியன் அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டன.

T20 WC: ஃபைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை

இந்த சீசனின் முதல் டிரேடிங் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி இடையே நடந்தது. ஆர்சிபி அணியிடமிருந்து ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜேசன் பெஹ்ரண்டார்ஃபை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 

அடுத்த டிரேடிங் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கேகேஆர் இடையே நடந்துள்ளது. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸிடமிருந்து நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் லாக்கி ஃபெர்குசன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரையும் கேகேஆர் அணி வாங்கியுள்ளது.

கேகேஆர் அணியிடம் கையிருப்பில் ரூ.45 லட்சம் இருந்தது. மேலும் இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் கூடுதலாக ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே தங்கள் அணிக்காக ஆடிய நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் லாக்கி ஃபெர்குசனை குஜராத் அணியிடமிருந்து கேட்டு வாங்கியது கேகேஆர். கடந்த சீசனில் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் ஆடி 12 விக்கெட் வீழ்த்தியிருந்தார். 

ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் கழட்டிவிட்ட மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம்

கேகேஆர் அணி வாங்கியுள்ள மற்றொரு வீரர் ஆஃப்கான் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ். கடந்த சீசனில் குஜராத் அணியில் ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக எடுக்கப்பட்ட குர்பாஸ், ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. இந்நிலையில், அவரையும் கேகேஆர் அணி வாங்கியுள்ளது.
 

click me!