ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் கழட்டிவிட்ட மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம்

By karthikeyan VFirst Published Nov 13, 2022, 4:20 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனுக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்களின் விவரங்களை பார்ப்போம்.
 

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடக்கவுள்ளது. கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்ததால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கிறது.

அதற்கு முன்பாக ஏலத்தில் இடம்பெறும் வீரர்கள் அடங்கிய பட்டியலை கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எனவே வரும் 15ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் விடுவிக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில், ஐபிஎல்லில் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

IPL 2023: ஏலத்துக்கு முன் முதல் டிரேடிங்.. ஆர்சிபியிடமிருந்து ஆஸி., ஃபாஸ்ட் பவுலரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி பல ஆண்டுகளாக மேட்ச் வின்னராக இருந்துவரும் மிகப்பெரிய சாம்பியன் பிளேயரான கைரன் பொல்லார்டை கழட்டிவிட்டுள்ளது. எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களை கொண்ட அடுத்த தலைமுறை அணியை கட்டமைக்க வேண்டிய நிலையில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கனத்த இதயத்துடன் பொல்லார்டை விடுவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 10 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு 5 வீரர்களை விடுவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்த வீரர்கள்:

ரோஹித் சர்மா, டிவால்ட் பிரெவிஸ், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டேனியல் சாம்ஸ், டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜஸ்ப்ரித் பும்ரா, டிரிஸ்டான் ஸ்டப்ஸ்.

மும்பை இந்தியன்ஸ் விடுவித்த வீரர்கள்:

கைரன் பொல்லார்டு, ஃபேபியன் ஆலன், டைமல் மில்ஸ், மயன்க் மார்கண்டே, ரித்திக் ஷோகின்.

ஆர்சிபியிடமிருந்து ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜேசன் பெஹ்ரண்டார்ஃபை வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

சிஎஸ்கே அணி - ஜடேஜா இடையே மோதல்போக்கு இருந்துவந்த நிலையில், ஜடேஜாவை கண்டிப்பாக தக்கவைக்கவேண்டும் என்று கேப்டன் தோனி திட்டவட்டமாக கூறியதால் ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளார். 9 வீரர்களை தக்கவைத்த சிஎஸ்கே அணி, 4 வீரர்களை விடுவித்துள்ளது.

சிஎஸ்கே அணி தக்கவைத்த வீரர்கள்:

தோனி, ஜடேஜா, மொயின் அலி, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, முகேஷ் சௌத்ரி, ட்வைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர்.

முதலில் இந்த சீனியர் வீரர்களை தூக்கி போடுங்க.. அப்பதான் டீம் விளங்கும்..! சேவாக் அதிரடி

சிஎஸ்கே விடுவித்த வீரர்கள்:

கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, நாராயண் ஜெகதீசன், மிட்செல் சாண்ட்னெர்.
 

click me!