தோனி - கம்பீர் கேப்டன்சி வித்தியாசம்..! ஒரே வாக்கியத்தில் நச்சுனு சொன்ன கேகேஆர் முன்னாள் இயக்குநர்

By karthikeyan VFirst Published Jun 20, 2020, 10:56 PM IST
Highlights

தோனி - கம்பீர் ஆகிய இருவரது கேப்டன்சி அணுகுமுறை குறித்து கேகேஆர் அணியின் முன்னாள் இயக்குநர் ஜாய் பட்டாச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார். 
 

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்து, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி கோப்பைகளையும், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு 3 முறை ஐபிஎல் டைட்டிலையும் வென்று கொடுத்துள்ளார். 

கம்பீர் இந்திய அணியின் கேப்டனாக செயல்படவில்லையென்றாலும், ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் கேப்டனாக செயல்பட்டு, 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் கேகேஆர் அணிக்கு ஐபிஎல் டைட்டிலை வென்று கொடுத்துள்ளார். 

தோனி மற்றும் கம்பீரின் கேப்டன்சி அணுகுமுறை முற்றுலும் வேறுபட்டது என்றாலும், ஐபிஎல்லில் இருவருமே வெற்றிகரமான கேப்டன்கள் தான்.

இந்நிலையில், கம்பீர் மற்றும் தோனி ஆகிய இருவரின் கேப்டன்சி குறித்து ”22 யார்ன்ஸ் வித் கவுரவ் கபூர்” என்ற நிகழ்ச்சியில் பேசிய கேகேஆர் அணியின் முன்னாள் இயக்குநர் ஜாய் பட்டாச்சார்யா, தோனி மிஸ்டர் கூல்; எப்போதுமே கூலாக இருப்பார். ஆனால் கம்பீர் கூலாகவே இருக்கமாட்டார் என்று பட்டாச்சார்யா தெரிவித்தார். ஆனால் அந்தந்த கேப்டன்களின் அணுகுமுறை மற்றும் கேரக்டருக்கு ஏற்ப அணி நிர்வாகம் நடந்துகொண்டால், வெற்றிகரமாக திகழமுடியும் எனவும் தெரிவித்தார். 

கம்பீர் தோனிக்கு நேர்மாறானவர். களத்தில் ஆக்ரோஷமாக இருப்பார். வெற்றி வேட்கை கொண்டவர் கம்பீர். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை முன்னின்று வழிநடத்துபவர் கம்பீர்.
 

click me!