கேகேஆர் அணியை ஆட்டிப்படைக்கும் கொரோனா..! 4வது வீரருக்கு கொரோனா பாசிட்டிவ்

By karthikeyan VFirst Published May 8, 2021, 3:52 PM IST
Highlights

கேகேஆர் வீரர் பிரசித் கிருஷ்ணாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
 

ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஐபிஎல் 14வது சீசன் பாதியில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இந்த சீசனில் 29 போட்டிகள் மட்டுமே  நடந்துள்ள நிலையில், எஞ்சிய 31 போட்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

கேகேஆர் வீரர்களுக்குத்தான் முதலில் கொரோனா உறுதியானது. கேகேஆர் அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியானதையடுத்து, கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு மறுநாளே, சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவருக்கு கொரோனா உறுதியானது. அதே நாளிலேயே, டெல்லி வீரர் அமித் மிஷ்ரா, சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியானதையடுத்து, ஐபிஎல் 14வது சீசன் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளுக்கு திரும்பிவருகின்றனர். இங்கிலாந்து வீரர்கள் அவர்கள் நாட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்ட நிலையில், ஆஸி., மற்றும் நியூசி., வீரர்கள் மாலத்தீவு வழியாக தங்கள் நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், கேகேஆர் அணியில் இருந்த நியூசி., வீரர் டிம் சேஃபெர்ட்டுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவர் அகமதாபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், டிம் சேஃபெர்ட் ஆகிய கேகேஆர் வீரர்களை தொடர்ந்து கேகேஆர் அணியின் 25 வயது ஃபாஸ்ட் பவுலரான பிரசித் கிருஷ்ணாவுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கேகேஆர் வீரர்கள் நால்வருக்கு இதுவரை கொரோனா உறுதியாகியிருக்கிறது.
 

click me!