IPL 2023: முக்கியமான போட்டியில் கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published May 7, 2023, 10:24 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் நாளைய போட்டியில் களமிறங்கும் கேகேஆர்  மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் நிலையில், இனிவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது ஆகும். குஜராத் டைட்டன்ஸ் 16 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட ஒரு காலை எடுத்து பிளே ஆஃபில் வைத்துவிட்டது.  சிஎஸ்கே அணி 13 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

தலா 10 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 10 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் 10 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8ம் இடத்தில் இருக்கும் கேகேஆர் ஆகிய 2 அணிகளும் மோதுகின்றன.

Latest Videos

IPL 2023: தோனி ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்திருந்தால் 3 முறை டைட்டில் ஜெயித்திருப்பார்! வாசிம் அக்ரம் அதிரடி

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் இந்த போட்டி கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 2 அணிகளுக்குமே முக்கியமான போட்டி. கடந்த போட்டியில் ஜெயித்த அதே உத்வேகத்துடன் கேகேஆர் அணியும், கடந்த போட்டியில் தோற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பிளே ஆஃபிற்கு முன்னேற வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்திலும் களமிறங்குகின்றன.

இந்த போட்டியில் களமிறங்கும் கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச கேகேஆர் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி. 

IPL 2023: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி பிளே ஆஃபில் ஒரு கால் வைத்துவிட்டது குஜராத் டைட்டன்ஸ்

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

click me!