IPL 2023: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி பிளே ஆஃபில் ஒரு கால் வைத்துவிட்டது குஜராத் டைட்டன்ஸ்

Published : May 07, 2023, 08:20 PM IST
IPL 2023: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி பிளே ஆஃபில் ஒரு கால் வைத்துவிட்டது குஜராத் டைட்டன்ஸ்

சுருக்கம்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபில் ஒரு காலை வைத்தது.  

ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், இந்த சீசனின் பலமான 2 அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மோதின. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் க்ருணல் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியதால் க்ருணல் பாண்டியா கேப்டன்சி செய்தார். 

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, கரன் ஷர்மா, க்ருணல் பாண்டியா (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்வப்னில் சிங், யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், மோசின் கான், ஆவேஷ் கான். 

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.

IPL 2023: 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மண்ணில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ரிதிமான் சஹா இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடி 20 பந்தில் அரைசதம் அடித்த சஹா, 43 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.  முதல் விக்கெட்டுக்கு கில்லும் சஹாவும் இணைந்து 12 ஓவரில் 142 ரன்களை குவித்தனர். சஹா சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஷுப்மன் கில் 51 பந்தில் 7 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தும் கூட அவரால் சதமடிக்க முடியவில்லை. அவர்கள் இருவரது அதிரடியான அரைசதங்கள் மற்றும் டேவிட் மில்லரின் ஃபினிஷிங்கால்(12 பந்தில் 21 ரன்கள்) 20 ஓவரில் 227 ரன்களை குவித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

IPL 2023: குஜராத்துக்கு எதிரான தோல்வி.. ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய சங்கக்கரா

228 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கைல் மேயர்ஸ் மற்றும் குயிண்டன் டி காக் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி 8.2 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 88 ரன்களை குவித்தனர். 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து கைல் மேயர்ஸ் அரைசதத்தை தவறவிட, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டி காக் 41 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்தார். அதன்பின்னர் மற்ற அனைத்து வீரர்களும் பேட்டிங்கில் சொதப்ப, 20 ஓவரில் 171 ரன்கள் மட்டுமே அடிக்க, 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபில் ஒரு காலை வைத்துவிட்டது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: ஒவ்வொரு அடியும் இடி மாதிரி.. சிக்சர் மழை பொழிந்து சாதனை படைத்த வைபவ்..
Virat Kohli: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை..! அலெக்ஸ் ஹேல்ஸை சமன் செய்த கிங் கோலி..!