IPL 2021 அமீரகத்தில் அசத்தலாக ஆடும் கேகேஆர் vs டெல்லி கேபிடள்ஸ் பலப்பரீட்சை.! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Sep 27, 2021, 10:01 PM IST
IPL 2021 அமீரகத்தில் அசத்தலாக ஆடும் கேகேஆர் vs டெல்லி கேபிடள்ஸ் பலப்பரீட்சை.! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனில் நாளை 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் கேகேஆரும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. இந்த போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது.

10 போட்டிகளின் முடிவில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் டெல்லி அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது. 10 போட்டிகளின் முடிவில் 8 புள்ளிகளை பெற்றுள்ள கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெறுவது கட்டாயம். வெற்றி கட்டாயத்துடன் களமிறங்குவது கேகேஆர் தான்.

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  கேகேஆர் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல், கடந்த போட்டியில் காலில் காயமடைந்ததால், அவருக்கு பதிலாக பென் கட்டிங் அல்லது டிம் சேஃபெர்ட் ஆகிய இருவரில் ஒருவர் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.

உத்தேச கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), பென் கட்டிங்/டிம் சேஃபெர்ட், சுனில் நரைன், ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் 3 வெளிநாட்டு வீரர்களுடன் தான் டெல்லி அணி ஆடியது. இந்த போட்டியில் லலித் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்படலாம்.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், லலித் யாதவ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்க்யா, ஆவேஷ் கான்.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!
டி20 உலகக் கோப்பைக்கு கடப்பாரை டீமை களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. சிக்சர் மழைக்கு ரெடியா?