ஜோ ரூட் விலகல்.. ஸ்டோக்ஸை விட அவருதான் சிறந்த கேப்டன்சி சாய்ஸ்..! கெவின் பீட்டர்சன் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 8, 2020, 5:50 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸை கேப்டன்சி செய்யவைக்க வேண்டாம் என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 3 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, நடக்கவுள்ள முதல் கிரிக்கெட் தொடர். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு இடையே நடக்கவுள்ள டெஸ்ட் தொடர் தான். இந்த டெஸ்ட் தொடர் வரும் ஜூலை 8ம் தேதி தொடங்கவுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்று 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. ஜூலை 8ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 

இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆடுவது சந்தேகம். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அடுத்த மாதம் ரூட்டுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருக்கிறது. எனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரூட் ஆடுவது சந்தேகம். 

கேப்டன் ரூட் ஆடாத நிலையில், துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தான் கேப்டனாக செயல்படுவார். ஆனால் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், ரூட் ஆடவில்லையென்றால், பென் ஸ்டோக்ஸிடம் கேப்டன்சி பொறுப்பை கொடுப்பதைவிட, விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேப்டன்சி பொறுப்பை கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

துணை கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸை விட்டுவிட்டு, பட்லரிடம் கேப்டன்சி பொறுப்பு கொடுக்கப்படுவது கடினமான காரியம். ஆனால் சிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸுக்கு கேப்டன்சி பொறுப்பு அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால், அது அவரது ஆட்டத்தை பாதிக்க வாய்ப்பிருப்பதால், கேப்டன்சி பொறுப்பை பட்லரிடம் வழங்கலாம் என்பது கெவின் பீட்டர்சனின் கருத்து. 

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, கேப்டன்சி தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக கெவின் பீட்டர்சன் அப்படி தெரிவித்துள்ளார். 
 

click me!