#CSKvsMI பொல்லார்டின் மோசமான கேப்டன்சி தான் மும்பை அணியின் தோல்விக்கு காரணம்..! கெவின் பீட்டர்சன் கடும் தாக்கு

By karthikeyan VFirst Published Sep 20, 2021, 4:28 PM IST
Highlights

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு கேப்டன் பொல்லார்டின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாகம் நேற்று மீண்டும் தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்கள் டுப்ளெசிஸ், ரெய்னா, மொயின் அலி, தோனி ஆகிய 4 சீனியர் வீரர்களும், அணியின் ஸ்கோர் 24 ரன்களாக இருக்கும்போதே ஆட்டமிழந்துவிட்டனர். அம்பாதி ராயுடுவும் ரன்னே அடிக்காமல் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிவிட்டார்.

24 ரன்களுக்குள்ளாக 5 பேரை இழந்துவிட்ட சிஎஸ்கே அணி, ருதுராஜ் கெய்க்வாட்டின் பொறுப்பான அரைசதத்தால்(88) 20 ஓவரில் 156 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணி, 136 ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸை சுருட்டி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே.

இந்நிலையில், இந்த போட்டியில் மும்பை அணியின் தோல்விக்கு பொல்லார்டின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கெவின் பீட்டர்சன், மும்பை அணி அருமையாக தொடங்கியது. சிஎஸ்கே அணியின் 4 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திவிட்டது மும்பை அணி. ராயுடுவும் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிவிட்டார். இவ்வளவு விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே வீழ்த்திவிட்ட மும்பை அணி அந்த முமெண்ட்டத்தை இழந்திருக்கக்கூடாது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ட்ரிக்கை தவறவிட்டுவிட்டது. பும்ராவிற்கு 2-3 ஓவர்கள் தொடர்ச்சியாக பொல்லார்டு கொடுக்காதது ஏன் என தெரியவில்லை. ஒருவேளை அப்படி செய்திருந்தால், 40/7 அல்லது 50/7 என்ற மோசமான நிலைக்கு சிஎஸ்கே சென்றிருக்கும். 70-80 ரன்களில் சிஎஸ்கேவை சுருட்டியிருக்கலாம். சிஎஸ்கே பின் தங்கியிருந்த நிலையில், ஃபாஸ்ட் பவுலர்களை வைத்து பொல்லார்டு அட்டாக் செய்யாதது தான் தோல்விக்கு காரணம் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
 

click me!