#IPL2021 தவறை தன்மேல் வச்சுகிட்டு பிராவோ மீது டென்சனான தோனி..! என் தப்பு என்ன இருக்குனு கேட்ட பிராவோ.. வீடியோ

By karthikeyan VFirst Published Sep 20, 2021, 3:37 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சவுரப் திவாரியின் கேட்ச்சை பிடிப்பதில் தோனிக்கும் பிராவோவுக்கும் இடையே சரியான புரிதலும் தொடர்பும் இல்லாததால் கேட்ச் தவறவிடப்பட்ட நிலையில், பிராவோ மீது தோனி கோபப்பட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாகம் நேற்று மீண்டும் தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்கள் டுப்ளெசிஸ், ரெய்னா, மொயின் அலி, தோனி ஆகிய சீனியர் வீரர்கள் யாருமே சரியாக ஆடாதபோதிலும், ருதுராஜ் கெய்க்வாட்டின் பொறுப்பான அரைசதத்தால்(88) 20 ஓவரில் 156 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணி, 136 ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸை சுருட்டி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே.

இந்த போட்டியில் இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் ஆடாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சவுரப் திவாரி மட்டுமே நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவராலும் மும்பை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை.

சவுரப் திவாரி மட்டும் நிலைத்து ஆடிக்கொண்டிருந்த நிலையில், 18வது ஓவரில் அவர் ஒரு கேட்ச் கொடுத்தார். அவர் ஃபைன் லெக் திசையில் அடிக்க முயன்ற பந்து காற்றில் பறக்க, அதை பிடிக்க டீப் ஃபைன் லெக் திசையில் நின்ற பிராவோவும், விக்கெட் கீப்பர் தோனியும் ஒருசேர ஓடிவந்தனர். அது உண்மையாகவே பிராவோவின் கேட்ச் தான். பிராவோ எளிதாக பிடித்திருக்க வேண்டிய கேட்ச் அது. பிராவோ பந்தை நோக்கி முன்பக்கமாக ஓடிவந்தார். ஆனால் தோனி அந்த கேட்ச்சை பிடிக்க பின்பக்கமாக ஓடினார்.

எனவே அதுமட்டுமல்லாது அந்த கேட்ச் பிராவோவுக்குத்தான் பக்கமாக இருந்தது. ஆனால் தோனியும் ஓடிவந்ததையடுத்து, பிராவோவாலும் பிடிக்க முடியவில்லை. பந்தை நெருங்கிய பிராவோ, தோனி ஓடிவந்ததால் பந்துக்கு அருகே வந்து நின்றுவிட்டார். ஆனால் தோனியோ அந்த கேட்ச்சை பிடிக்காமல் கோட்டைவிட்டார். தான் விட்டதற்கு பிராவோவும் ஓடிவந்ததுதான் காரணம் என்பதை போல, அவர் மீது கடுமையாக கோபப்பட்டார். 

மிஸ்டர் கூல் என பெயர்பெற்ற தோனி, கூலான மனநிலையை இழந்து, பிராவோவை கத்தினார். அதைக்கண்ட பிராவோ, என் மீது என்ன தவறு? அது என் கேட்ச் என்பதை போல தோனிக்கு ரியாக்ட் செய்தார். தோனி ஓடாமல் இருந்திருந்தால் அந்த கேட்ச்சை பிராவோ எளிதாக பிடித்திருப்பார் என்பதை இந்த வீடியோவில் பார்த்தால் தெரியும்.
 

pic.twitter.com/QIccWSGsSE

— Maqbool (@im_maqbool)
click me!