டிராவிட் எனக்கு அனுப்பிய ஈமெயில் இது! இத பிரிண்ட் அவுட் போட்டு படிங்க! இங்கி., வீரர்களுக்கு பீட்டர்சன் அறிவுரை

By karthikeyan VFirst Published Jan 23, 2021, 10:07 PM IST
Highlights

இங்கிலாந்து வீரர்கள் டோமினிக் சிப்ளி மற்றும் ஜாக் க்ராவ்லி ஆகிய இருவருக்கும் ராகுல் டிராவிட் இடது கை ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தனக்கு எழுதிய கடிதத்தை டுவிட்டரில் பதிவேற்றி, அதை படிக்கும்படி பீட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார்.
 

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் நடந்துவருகிறது. இலங்கையின் இடது கை ஸ்பின்னர் எம்பல்டானியாவின் பவுலிங்கில் தான் க்ராவ்லி மற்றும் சிப்ளி ஆகிய இருவரும் தொடர்ச்சியாக ஆட்டமிழந்துகொண்டே இருக்கின்றனர். 

2வது டெஸ்ட்டிலும் இருவரும் ஐந்து ரன்களுக்குள்ளாக ஆட்டமிழந்துவிட்டனர். அதனால் இடது கை ஸ்பின்னர்களை எப்படி ஆட வேண்டும் என்று ராகுல் டிராவிட் தனக்கு அனுப்பிய ஈமெயில் கடிதத்தை பதிவிட்டு, அதை பின்பற்றி நடந்துகொள்ளுமாறு பீட்டர்சன் க்ராவ்லி மற்றும் சிப்ளிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இடது கை ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று எனக்கு ராகுல் டிராவிட் அனுப்பிய ஈமெயில் ஸ்பின்னை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கற்பிக்கும். எனவே ராகுல் டிராவிட் எனக்கு எழுதிய இந்த ஈமெயில் க்ராவ்லி மற்றும் சிப்ளிக்கு பெரிதும் பயன்படும். அதனால் இதை பிரிண்ட் அவுட் எடுத்து அவர்களிடம் கொடுக்கவும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள பீட்டர்சன், ராகுல் டிராவிட் தனக்கு அனுப்பிய ஈமெயிலையும் அதில் இணைத்துள்ளார்.

Hey , print this and give it to Sibley & Crawley.
They can call me to discuss it at length if they want...!
👍🏻 pic.twitter.com/qBmArq211s

— Kevin Pietersen🦏 (@KP24)

ராகுல் டிராவிட் பீட்டர்சனுக்கு இடது ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அனுப்பிய ஈமெயிலின் முக்கியமான 2 பாயிண்டுகள்:

1. அவர் குறிப்பிட்டிருந்த முக்கியமான அம்சம், பந்தின் லெந்த்தை முடிந்தவரை விரைவில் கணித்துவிட வேண்டும். அவசரப்படாமல் காத்திருந்து எப்படி ஆடுவது என்று முடிவெடுக்க வேண்டும்

2. கால்காப்பு கட்டாமல் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்டு பயிற்சி செய்தால், பந்து காலில் படுவதால் ஏற்படும் வலியை பொறுக்கமுடியாமல், தானாகவே பேட் காலுக்கு முன்னால் வேகமாக சென்றுவிடும் என்பதால் அப்படி ஆடி பயிற்சி எடுக்க வேண்டும் ஆகிய 2 பாயிண்டுகள் முக்கியமானவை.
 

click me!