#IPL2021 ஸ்ரீசாந்த்தை தட்டி தூக்க முட்டி மோதும் 3 அணிகள்..!

By karthikeyan VFirst Published Jan 23, 2021, 9:33 PM IST
Highlights

7 ஆண்டுகள் தடை முடிந்து மீண்டும் கிரிக்கெட் ஆட வந்திருக்கும் ஸ்ரீசாந்த்தை ஏலத்தில் எடுக்க 3 அணிகள் ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது.
 

ஐபில்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக ஆடிய, இந்தியாவின் முன்னணி பவுலர்களில் ஒருவராக திகழ்ந்த ஸ்ரீசாந்த், 2013 ஐபிஎல்லில் சூதாட்ட புகாரில் சிக்கி தடையில் இருந்த நிலையில், அவரது தடை முடிந்ததால், உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் கேரளா அணியில் ஆடிவருகிறார்.

7 ஆண்டுகள் எந்தவிதமான கிரிக்கெட்டும் ஆடவில்லை என்றாலும், சையத் முஷ்டாக் அலி தொடரில் அபாரமாக பந்துவீசி அசத்திய ஸ்ரீசாந்த், தனது பெயரை ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் சேர்த்துள்ளார்.

ஸ்ரீசாந்த்தை எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆர்வம் காட்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சீசனில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். அதே சாம்சனின் கேப்டன்சியில் தான் கேரள அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக பந்துவீசிய நிலையில், சாம்சன் ஐபிஎல்லில் வழிநடத்தவுள்ள ராஜஸ்தான் அணி அவரை எடுக்க ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. மேலும், தடைக்கு முன் கடைசியாக ஸ்ரீசாந்த், அந்த அணியில் தான் ஆடினார்.

அதேபோல சிஎஸ்கே அணியும் ஸ்ரீசாந்த்தை எடுக்க ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. தோனியின் கேப்டன்சியில் இந்திய அணியில் ஸ்ரீசாந்த் ஆடியிருக்கிறார். இன் ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் என இரண்டுமே செய்யக்கூடிய பவுலர் என்ற வகையில், ஸ்ரீசாந்த் மீது சிஎஸ்கே ஆர்வம் காட்டும்.

ஸ்ரீசாந்த் ஏற்கனவே ஆடியுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்ரீசாந்த் மீது ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணியில் ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் இருக்கின்றனர். ஷெல்டான் கோட்ரெல் கழட்டிவிடப்பட்டுள்ள நிலையில், இந்திய ஃபாஸ்ட் பவுலருக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஸ்ரீசாந்த்தை எடுக்கலாம்.
 

click me!