#AUSvsIND சிட்னி டெஸ்ட்டில் ஆஸி., வீரர்கள் டிரிக்கை மிஸ் பண்ணிட்டாங்க..! அஷ்வின் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 23, 2021, 4:18 PM IST
Highlights

சிட்னி டெஸ்ட்டில் ஆஸி., அணியின் வியூகம் சரியில்லை என்று அந்த போட்டியில் இந்திய அணி போட்டி டிரா செய்ய பெரிதும் உதவிய அஷ்வின் தெரிவித்துள்ளார்.
 

ஆஸி., மண்ணில் அந்த அணியை 2வது முறையாக வீழ்த்தி டெஸ் தொடரை வென்றது இந்திய அணி. முதல் டெஸ்ட்டில் அடிலெய்டில் தோற்ற இந்திய அணி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. சிட்னி டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

சிட்னி டெஸ்ட்டில் ஆஸி., வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அஷ்வினும் விஹாரியும் இணைந்து 40 ஓவர்கள் விக்கெட் விட்டுக்கொடுக்காமல் பேட்டிங் ஆடி போட்டியை டிரா செய்தனர். அந்த ஜோடியை பிரிக்க உத்தி ரீதியாக முயற்சி செய்யாமல், விரக்தியில் ஸ்லெட்ஜிங் செய்வதாக நினைத்து, கூட கொஞ்சம் ஏற்றித்தான் விட்டனர் ஆஸி., வீரர்கள்.

அந்த போட்டியில் ஆஸி., அணியின் வியூகம் சரியில்லை என்று அஷ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூபில் பேசிய அஷ்வின், சிட்னி டெஸ்ட்டின் 4வது இன்னிங்ஸில் ஆஸி., அணியின் வியூகம் எனக்கு ஆட ஆர்வமாக இருந்தது. நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை ஆஸி., உணரவில்லை என்பதை அவர்களது வியூகம் பறைசாற்றியது.

காயம் காரணமாகத்தான் நாங்கள் சிங்கிள் ரொடேட் செய்யவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர்கள் கருதினர். ஆனால் உண்மையாகவே ஒருவரால் காலை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை. மற்றொருவர் உடலில் அடி வாங்கினார். பின்னர், அதுவே எங்களது வியூகமாக மாறிவிட்டது. திடீரென எனக்கு முதுகுப்பிடிப்பு ஏற்பட்டது. என்னால் நகர முடியவில்லை. அப்போது எனக்கு நேராக வீசியிருந்தால் எனது கையுறையில் பட்டோ, எட்ஜ் ஆகியோ கேட்ச் ஆகியிருக்கும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. இதுபோக வம்பிழுப்பது வேறு; அப்போதே நானும் விஹாரியும், ஆஸி., வெற்றியை தவறவிட்டுவிட்டது என்று நினைத்தோம் என்று அஷ்வின் தெரிவித்தார்.
 

click me!