#BBL மெல்போர்ன் ரெனெகேட்ஸை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அபார வெற்றி.. ஆட்டநாயகன் லபுஷேன்

By karthikeyan VFirst Published Jan 23, 2021, 2:47 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனெகேட்ஸை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பிரிஸ்பேன் ஹீட் அணி.
 

பிக்பேஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையேயான போட்டி மெல்போர்னில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் கேப்டன் கிறிஸ் லின் அதிரடியாக ஆடி 30 பந்தில் 52 ரன்கள் அடித்தார்.

3ம் வரிசையில் இறங்கிய மார்னஸ் லபுஷேன், அதிரடியாக ஆடி 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 31 பந்தில் 49 ரன்கள் அடித்தார். ஜோ டென்லி, பர்ன்ஸ் ஆகியோர் சரியாக ஆடவில்லை. 20 ஓவரில் 173 ரன்கள் அடித்தது பிரிஸ்பேன் ஹீட் அணி.

174 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷான் மார்ஷ் 27 பந்தில் 28 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர் சாம் ஹார்பர் 32 பந்தில் தலா 4 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 57 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் 147 ரன்களுக்கே சுருண்டு, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ரெனெகேட்ஸ் அணி.

பேட்டிங்கில் 49 ரன்கள் அடித்து, பவுலிங்கில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய லபுஷேன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!