சூர்யகுமார் யாதவை சஞ்சு சாம்சனுடன் ஒப்பிடாதீங்க..! செம கடுப்பான கபில் தேவ்

By karthikeyan VFirst Published Mar 24, 2023, 3:16 PM IST
Highlights

சூர்யகுமார் யாதவை சஞ்சு சாம்சனுடன் ஒப்பிடக்கூடாது என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
 

இந்திய அணியின் அதிரடி வீரரும், டி20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய மேட்ச் வின்னருமான சூர்யகுமார் யாதவ், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சமகாலத்தின் சிறந்த வீரராக பார்க்கப்படுகிறார். ஆனால் அவர் டி20 கிரிக்கெட்டில் ஜொலிக்கும் அளவிற்கு ஒருநாள் கிரிக்கெட்டில் ஜொலிக்கவில்லை.

டி20 கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் 3 சதங்களுடன் 1675 ரன்களை குவித்துள்ள சூர்யகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டில் 23 போட்டிகளில் ஆடி வெறும் இரண்டே அரைசதங்களுடன் 433 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் வழக்கமாக 4ம் வரிசையில் ஆடும் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடாததால் இந்த தொடரில் 4ம் வரிசையில் இறங்க வாய்ப்பு பெற்றார் சூர்யகுமார் யாதவ். ஆனால் யாருமே எதிர்பார்த்திராத விதமாக 3 போட்டிகளிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி விரும்பத்தகாத பட்டியலிலும் இணைந்தார்.

நாடா, ஐபிஎல்லா..? முடிவெடுத்தே தீரணும்..! பிசிசிஐக்கு ரவி சாஸ்திரி கோரிக்கை

சூர்யகுமார் யாதவ் 3 போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட்டானதையடுத்து, ஒருநாள் போட்டிகளில் வெறும் 22 என்ற மோசமான சராசரியை வைத்த் தொடர்ந்து சொதப்பிவரும் சூர்யகுமார் யாதவுக்கு தொடர் வாய்ப்பளிக்கும் இந்திய அணி, 66 சராசரி வைத்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்காதது அநீதி என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுகின்றனர். அதனால் சூர்யகுமார் யாதவ் - சஞ்சு சாம்சன் ஒப்பீடு பரபரப்பாக பேசப்பட்டது.

சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 330 ரன்கள் அடித்துள்ளார். அவர் ஆடிய 10 இன்னிங்ஸ்களில் 5 நாட் அவுட். அதனால் அவரது பேட்டிங் சராசரி 66 ஆகும். 

நீங்க சீனியர்.. எனக்கு கீழ் பணிபுரிவது நல்லா இருக்காது! சீனியர் ஸ்பின்னரின் சேவையை ஏற்க மறுத்த ராகுல் டிராவிட்

சூர்யகுமார் யாதவ் - சஞ்சு சாம்சன் ஒப்பீடு பரபரப்பான நிலையில், அதுகுறித்து பேசிய கபில் தேவ், நன்றாக ஆடும் வீரருக்கு கண்டிப்பாக அதிக வாய்ப்புகள் கிடைக்கும். சூர்யகுமார் யாதவை சஞ்சு சாம்சனுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. சஞ்சு சாம்சன் சரியாக ஆடவில்லை என்றால் வேறு யாருடனாவது ஒப்பிடுவார்கள். இதை செய்யக்கூடாது. அண் நிர்வாகம் சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவளிக்கும் விதமாக அதிக வாய்ப்பளிக்கிறது. மக்கள் அவர்களது கருத்தை தெரிவிக்கத்தான் செய்வார்கள். ஆனால் அணி நிர்வாகம் தான் அதுகுறித்து முடிவெடுக்கும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
 

click me!