இந்திய அணிக்கு தோல்வி பயம்.. அதனால் தான் பாகிஸ்தானுக்கு வர மறுக்கிறார்கள்.! தூண்டிவிடும் பாக்., முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Mar 24, 2023, 2:42 PM IST
Highlights

இந்திய அணி தோல்வி பயத்தால் தான் ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு வர மறுப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் இம்ரான் நசீர் கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பரஸ்பர இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானிலும், ஒருநாள் உலக கோப்பை இந்தியாவிலும் நடக்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்க முடியாது. இந்திய அரசாங்கம் தான் முடிவு எடுக்கும். அதன்படிதான் பிசிசிஐ செயல்பட முடியும். இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப அரசு அனுமதிக்காது என்பதால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. ஆசிய கோப்பை தொடர் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

நாடா, ஐபிஎல்லா..? முடிவெடுத்தே தீரணும்..! பிசிசிஐக்கு ரவி சாஸ்திரி கோரிக்கை

ஆசிய கோப்பையில் ஆடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், ஒருநாள் உலக கோப்பையில் ஆடுவதற்கு பாகிஸ்தான் அணியும் இந்தியாவிற்கு வராது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்தது.

இதுதொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசித்து வருகிறது. கடந்த மாதம் கூட இதுகுறித்து விவாதிக்க ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த மாதம் இதுதொடர்பாக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஆசிய அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து ஆடும்போது இந்தியாவிற்கு மட்டும் பாதுகாப்பு பிரச்னையா..? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் இம்ரான் நசீர், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுப்பதற்கு பாதுகாப்பு விஷயங்கள் காரணமில்லை. எத்தனையோ அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் ஆடுகின்றன. அண்மையில் கூட ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு வந்தது. அதனால் பாதுகாப்பு விவகாரத்தால் வரமுடியாது என்று இந்தியா கூறுவதெல்லாம் நொண்டிச்சாக்கு. உண்மையான காரணம், இந்திய அணி தோற்றுவிடுவோமோ என்று பயப்படுகிறது. தோல்வி பயத்தால் தான் ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு வர இந்திய அணி மறுக்கிறது என்று இம்ரான் நசீர் கூறியுள்ளார்.

நீங்க சீனியர்.. எனக்கு கீழ் பணிபுரிவது நல்லா இருக்காது! சீனியர் ஸ்பின்னரின் சேவையை ஏற்க மறுத்த ராகுல் டிராவிட்

இந்திய அணி பயப்படவில்லை என்பது அவருக்கும் தெரியும். ஆனால் அப்படி சொன்னாலாவது முறுக்கிக்கொண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராதா என்ற நோக்கத்தில் தூண்டிவிடும் முனைப்பில் இப்படி பேசியுள்ளார்.
 

click me!