பாகிஸ்தான் அபாயகரமான அணி.. இந்திய அணி இதை செய்யலைனா ஜெயிக்க முடியாது..! கபில் தேவ் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 24, 2021, 6:44 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அழுத்தத்தை சிறப்பாக கையாண்டால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் போட்டி என்றால் பொதுவாகவே களைகட்டும். அதிலும் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் அலப்பறைகளுக்கும், எதிர்பார்ப்பிற்கும், வெற்றி கொண்டாட்டத்திற்கும், மோதல்களுக்கும் பஞ்சமே இருக்காது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடுவதால், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களின் அலப்பறைகள் வேற  லெவலில் இருக்கும்.

டி20 உலக கோப்பை தொடரில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான 100 சதவிகித வின்னிங் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும், உலக கோப்பையில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் களமிறங்குகின்றன.

இதுவரை உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை. ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் 7 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியுள்ள நிலையில், அதில் 7 முறையுமே இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் 5 முறை மோதியிருக்கின்றன. அதில் 5 முறையுமே இந்திய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே அந்த ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும், இந்தியாவின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் பாகிஸ்தானும் மோதுகின்றன.

உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தவே முடியாததற்கு, அந்த அணி அழுத்தத்தை சரியாக கையாளாதது தான் காரணம். இரு அணிகளுமே வலுவான அணிகள் தான். ஆனால் எந்த அணி அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணி தான் ஜெயிக்கும். 

அந்தவகையில், டி20 உலக கோப்பையின் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ள கபில் தேவ், இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இரு அணிகளுக்குமே அழுத்தம் அதிகமாக இருக்கும். எந்த அணி அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறது என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். பாகிஸ்தான் அணியில் நிறைய புதிய வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் அபாயகரமான அணி. போட்டி நடக்கும் அந்த குறிப்பிட்ட நாளில் பாகிஸ்தான் அணி எந்த அணியையும் வீழ்த்திவிடும். இந்திய அணி அழுத்தத்தை சிறப்பாக கையாளவில்லை என்றால் வெற்றி பெற முடியாது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
 

click me!