ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில், ஃபார்மில் இல்லாத விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை கூறியுள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த சுமார் 3ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கமுடியாமல் திணறிவருகிறார். 3 ஆண்டுகளாகவே அவர் சரியான ஃபார்மிலும் இல்லை.
இந்நிலையில், கடைசியாக அண்மையில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களில் விராட் கோலி ஆடவில்லை. அந்த தொடர்களில் ஓய்வு எடுத்துக்கொண்டார்.
ஆனால் ஃபார்மில் இல்லாத விராட் கோலி தொடர்ச்சியாக ஆடினால் தான் ஃபார்முக்கு வரமுடியும். ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் அடுத்தடுத்து வருவதால் ஜிம்பாப்வே தொடரில் ஆடியிருந்தால் ஃபார்முக்கு வந்திருக்கலாம் என சில முன்னாள் வீரர்கள் கருத்து கூறினர்.
இதையும் படிங்க - ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி ஜெயிக்கும்..? ஆஃப்கானிஸ்தான் முன்னாள் கேப்டனின் லாஜிக்
ஆனால் விராட் கோலி ஒரு மாதம் ஓய்வு எடுத்து ரிலாக்ஸ் செய்தார். ஆசிய கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆசிய கோப்பை மற்றும் அடுத்ததாக நடக்கவுள்ள டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களை இந்திய அணி வெல்ல, விராட் கோலி சிறப்பாக ஆடவேண்டியது கட்டாயம். எனவே அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்ட விராட் கோலி, கடந்த 10 ஆண்டில் இந்த ஒரு மாதம் தான், தான் பேட்டையே தொடவில்லை என்றும் தனக்கு ஓய்வு கண்டிப்பாக தேவைப்பட்டது என்றும் விராட் கோலி தெரிவித்திருந்தார்.
ஆசிய கோப்பையில் இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியில் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், கோலிக்கு கபில் தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க - IND vs PAK பலப்பரீட்சை: இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை
கோலி குறித்து பேசிய கபில் தேவ், கோலி ஃபார்மில் இல்லாததால் இதுதான் அவருக்கான கடைசி சான்ஸ் என்றெல்லாம் சொல்லமுடியாது. அவருக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். அவர் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடவேண்டும். சில நேரங்களில் அதிக ஓய்வெடுப்பதும் ஒர்க் அவுட் ஆகாது. தொழில்முறை கிரிக்கெட்டருக்கு தொடர்ச்சியாக ஆடுவதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது. அவர் முடிந்தவரை அதிகமான போட்டிகளில் ஆடவேண்டும். நன்றாக ஸ்கோர் செய்ய தொடங்கிவிட்டால் மனநிலை மாறிவிடும் என்றார் கபில் தேவ்.