கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு என்ற ஒன்று இருந்திருந்தால் இந்தியா எளிதில் வெற்றி பெற்றிருக்கும் என்று கன்னட நடிகர் சேத்தன் குமார் கூறியுள்ளார்.
கன்னட நடிகரும் சமூக ஆர்வலருமான சேத்தன் குமார் அஹிம்சா, இந்திய கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு கோரி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் நடந்து முடிந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததையடுத்து கிரிக்கெட்டில் இட ஒதுக்கீடு இல்லாததே தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
எங்களது வெற்றியை இப்படி கொண்டாடுறாங்க – பார்க்கவே வியப்பாக இருக்கிறது – டிராவிஸ் ஹெட் பெருமிதம்!
இது குறித்து அவர் தனது எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவுக்கு கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு தேவை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன். இந்திய கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு இருந்திருந்தால், இந்த உலகக் கோப்பையை நாங்கள் எளிதாக வென்றிருப்போம் என்று கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
என் வாழ்க்கையில் அடுத்த சேப்டர் – திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர்!
அகமதாபாத்தில் கடந்த 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும், ஒரு கிரிக்கெட் போட்டியின் முடிவுக்கும், இடஒதுக்கீட்டின் தேவைக்கும் இடையே சேத்தன் குமார் ஏற்படுத்திய தொடர்பு பரவலான கண்டனத்தைத் தூண்டியது.
Here’s my 10-minute basis for why we need reservations/representation in cricket & my logic for why team India, as a result, will be better performing overall than now
Pass on your feedback
Jai Bheemhttps://t.co/ENPPBy0EQd