பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அப்துல்லா ஷபீக் அடித்த கேட்சை கேன் வில்லியம்சன் ஓடி சென்று பிடித்து அனைவரிடமும் பாராட்டு பெற்றுள்ளார்.
பெங்களூரு சின்னசுவாமி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 35ஆவது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது.
இதில், ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 95 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபீக் 4 ரன்களில் டிம் சவுதி பந்தில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன், முழங்கால் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
Pakistan vs New Zealand: மழையால் ஓவர்கள் குறைப்பு – பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் வெற்றி இலக்கு!
அதுமட்டுமின்றி இந்த உலகக் கோப்பை போட்டியில் இடது கை கட்டைவிரலில் பலத்த காயம் அடைந்தார். அதோடு, இந்தப் போட்டியில் அவர் பீல்டிங்கில் நின்ற இடத்திலிருந்து 17 கிமீ தூரம் ஓடிச் சென்று அப்துல்லா ஷபீக் விக்கெட்டை கைப்பற்றினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Kane Williamson scored 95 runs and took a blinder with that thumb. pic.twitter.com/u9fTTvYWQB
— Johns. (@CricCrazyJohns)