சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு..! வில்லியம்சன் அதிரடி

By karthikeyan VFirst Published May 21, 2021, 4:59 PM IST
Highlights

ஐபிஎல் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டதாக கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் லீக் சுற்றில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, ஐபிஎல் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கொரோனா 2ம் அலையால் இந்தியா மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். நிலைமை மிக மோசமாக உள்ளதால் நாடே சுகாதார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருந்தது.

ஐபிஎல்லில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக திருப்பியனுப்ப வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு இருந்தது. கொரோனா பயோ பபுள் மிகக்கண்டிப்புடன் பின்பற்றபோதிலும், வீரர்களுக்கு கொரோனா பரவியதால், வீரர்களின் நலன் கருதி பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது ஐபிஎல்.

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்தியாவிலிருந்து நேரடியாக அவரவர் நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் மாலத்தீவு வழியாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஐபிஎல் பாதியில் நிறுத்தப்பட்டது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்றும், கொரோனா பயோ பபுளில் வீரர்கள் சிறப்பாக கவனிக்கப்பட்டதாகவும், ஆனால் பயோ பபுள் விதி மீறப்பட்டிருப்பதாகவும் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.
 

click me!