நான் பார்த்ததில் சிறந்த இன்னிங்ஸ்.. இவர்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்! சூர்யகுமாருக்கு வில்லியம்சன் புகழாரம்

By karthikeyan V  |  First Published Nov 20, 2022, 9:16 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஆடிய பேட்டிங்கை பார்த்த கேன் வில்லியம்சன், தான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று என்றும், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் என்றும் புகழாரம் சூட்டினார்.
 


இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, சூர்யகுமார் யாதவின் அபாரமான சதத்தால் 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது.

அபாரமாக பேட்டிங் ஆடி 49 பந்தில் சதமடித்த சூர்யகுமார் யாதவ், 51 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை குவித்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் 2வது சதம் இது. இந்தியாவின் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், வழக்கம்போலவே சில அசாத்தியமான ஷாட்டுகளை ஆடி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட்டு நியூசிலாந்தை மிரட்டினார். இந்திய அணி அடித்த 191 ரன்களில் 111 ரன்கள் சூர்யகுமார் யாதவ் அடித்தது. எஞ்சிய 80 ரன்களை மற்ற வீரர்கள் சேர்ந்து அடித்தனர்.

Tap to resize

Latest Videos

NZ vs IND: இந்தியாவிற்கு எதிராக ஹாட்ரிக்..! டி20 கிரிக்கெட்டில் 2வது ஹாட்ரிக்கை வீழ்த்தி டிம் சௌதி சாதனை

192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியை 126 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசமே சூர்யகுமார் யாதவின் இன்னிங்ஸ் தான். சூர்யகுமார் யாதவின் இன்னிங்ஸை தவிர்த்தால், இரு அணிகளிலும் பேட்டிங்  ஆடிய மற்ற அனைவருமே ஒரே அளவில் தான் பேட்டிங் ஆடினர். அவரது பேட்டிங் மட்டும் வித்தியாசமாக அமைந்தது.

NZ vs IND: 2வது டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இந்த போட்டிக்கு பின் பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்,  நாங்கள் எங்களது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சூர்யகுமார் யாதவின் பேட்டிங் நம்மை இந்த உலகைவிட்டு வேறு உலகிற்கு அழைத்துச்சென்றது. நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. அவர் ஆடிய சில ஷாட்டுகளை இதற்கு முன் நான் பார்த்ததேயில்லை. பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே எங்களுக்கு முமெண்ட்டும் கிடைக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் தான் இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமைந்தது. சூர்யகுமார் யாதவ் தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கேன் வில்லியம்சன் புகழாரம் சூட்டினார்.
 

click me!