கேப்டனை காக்கா புடிச்சாதான் பாக்., அணியில் ஆடமுடியும்.! பாக்., கிரிக்கெட் நிர்வாகதை கிழித்தெறிந்த ஜுனைத் கான்

By karthikeyan VFirst Published May 6, 2021, 3:45 PM IST
Highlights

கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்தால் மட்டுமே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நிரந்தரமாக ஆடமுடியும் என்று ஃபாஸ்ட் பவுலர் ஜுனைத் கான் தெரிவித்துள்ளார்.
 

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஜுனைத் கான். இடது கை ஃபாஸ்ட் பவுலரான ஜுனைத் கான் 2011ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக முதல் முறையாக அறிமுகமானார். பாகிஸ்தான் அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாத ஜுனைத் கான், அணியில் அவ்வப்போது சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்தார். கடைசியாக 2019ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக ஆடிய ஜுனைத் கான், அதன்பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவில்லை.

திறமையிருந்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் ஓரங்கட்டப்பட்ட வீரர்களில் ஜுனைத் கானும் ஒருவர். 

இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள ஜுனைத் கான், பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியில் திறமையை நிரூபிக்கும் வகையில் நிரந்தர இடம் கிடைக்கும். அப்படி அவர்களுடன் நெருக்கம் காட்டவில்லை என்றால் எடுப்பதும் நீக்குவதுமாகவே இருப்பார்கள்.

பாகிஸ்தான் அணிக்காக 3 விதமான போட்டிகளிலும் ஆடிவந்த எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. அதனால் சிறிது ஓய்வு கேட்டேன்; ஆனால் கொடுக்கவில்லை. அதிலிருந்தே என் மீது அவர்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. அதன்பின்னர் எனக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பெரிய நகரத்தில் இருந்து வந்திருந்தால் கூட, அந்த ஊர் மக்கள் ஆதரவுக்குரல் கொடுப்பார்கள். ஆனால் ஸ்வாபி, யாசிர் ஷா மற்றும் என்னப்போன்ற வீரர்கள் சிறு ஊர்களிலிருந்து வந்தவர்கள் என்பதால், ஊடகங்களும் என்க்களுக்காக பேசவில்லை. ஊடக அழுத்தம் தேர்வாளர்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்று ஜுனைத் கான் தெரிவித்தார்.
 

click me!