SA vs ENG: பட்லர் அபார சதம்.. ஜோஃப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்.. கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

By karthikeyan V  |  First Published Feb 2, 2023, 3:15 PM IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து. ஆனால் ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்றி மட்டுமே.
 


இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில் கடைசி ஒருநாள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க அணி:

Tap to resize

Latest Videos

ரீஸா ஹென்ரிக்ஸ், டெம்பா பவுமா (கேப்டன்), ராசி வாண்டர்டசன், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், வைன் பார்னெல், சிசாண்டா மகளா, லுங்கி இங்கிடி, டப்ரைஸ் ஷம்ஸி.

கோலியுடன் கம்பேர் பண்ற அளவுக்கு பாபர் அசாம் ஒரு ஆளே கிடையாது..! ரொம்ப நியாயமா பேசிய மிஸ்பா உல் ஹக்

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி, ஜோஃப்ரா ஆர்ச்சர்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் (1), பென் டக்கெட்(0), ஹாரி ப்ரூக்(6) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். 14 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் மலான் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். இருவருமே சதமடித்து, 4வது விக்கெட்டுக்கு 232 ரன்களை குவித்தனர். மலான் 118 ரன்களையும், ஜோஸ் பட்லர் 131 ரன்களையும் குவித்தனர். மொயின் அலி பின்வரிசையில் அதிரடியாக ஆடி 23 பந்தில் 41 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் இங்கிலாந்து அணி 346 ரன்களை குவித்தது. 

நீ ஒண்ணும் உம்ரான் மாலிக்கோ, முகமது சிராஜோ இல்ல.. அதனால் இதையாவது செய்..! அர்ஷ்தீப் சிங்கிற்கு கம்பீர் அறிவுரை

347 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியில் ரீஸா ஹென்ரிக்ஸ்(52), ஹென்ரிச் கிளாசன்(80), மார்க்ரம்(39), பவுமா (35), வைன் பார்னெல்(34) ஆகியோர் நன்றாக ஆடினாலும் சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்ததால் 43.1 ஓவரில் 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக 6 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவினார். 59 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் வென்றார்.
 

click me!