டி20 உலக கோப்பையில் முதலிடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்த ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி

By karthikeyan V  |  First Published Nov 11, 2022, 3:48 PM IST

டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவிற்கு எதிராக 170 ரன்களை குவித்த இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி டி20 உலக கோப்பையில் அபாரமான சாதனையை படைத்துள்ளது. 
 


டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளன.

வரும் 13ம் தேதி மெல்பர்னில் பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான இறுதிப்போட்டி நடக்கிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுமே தொடரை விட்டு வெளியேறிவிட்டது. 

Latest Videos

undefined

T20 WC: கம்பீர், ஹர்பஜன் எவ்வளவோ சொன்னாங்க.. கொஞ்சம் கூட கேட்காமல் தோற்றுப்போய் தொடரைவிட்டு வெளியேறிய இந்தியா

ஆஸ்திரேலியா அரையிறுதிக்குக்கூட முன்னேறவில்லை. ஆனால் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அடிலெய்டில் நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது.

169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் அபாரமாக பேட்டிங் ஆடினர். இந்திய அணி அவர்களது விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பைக்கூட உருவாக்கவில்லை. அந்தளவிற்கு மிகச்சிறப்பாகவும் நேர்த்தியாகவும், அதேவேளையில் அடித்தும் ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். புவனேஷ்வர் குமார், ஷமி, அஷ்வின் என இந்திய அணியின் சீனியர் பவுலர்களின் பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து தெறிக்கவிட்டனர்.

பட்லர் 49 பந்தில் 80 ரன்களையும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்தில் 86 ரன்களையும் குவிக்க, விக்கெட் இழப்பின்றி 169 ரன்கள் என்ற இலக்கை அடித்து இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது. ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணைந்து 170 ரன்களை குவித்தனர்.

T20 WC: அரையிறுதியில் படுதோல்வி.. உடைந்து அழுத ரோஹித்: தட்டிக்கொடுத்து தேற்றிய ராகுல் டிராவிட்! வைரல் வீடியோ

டி20 உலக கோப்பையில் இதுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர். 2010ல் இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே - குமார் சங்கக்கரா ஜோடி வெஸ்ட் இண்டீஸுக்கு 166 ரன்களை குவித்ததுதான் டி20 உலக கோப்பையில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோராக இருந்தது. அதை இந்த டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் டி காக் - ரைலீ ரூசோ ஜோடி 168 ரன்களை குவித்து முறியடித்தது. இதே உலக கோப்பையில் அந்த சாதனையையும் முறியடித்து 170 ரன்களை குவித்து புதிய சாதனையை படைத்தனர் ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி.
 

click me!