T20 WC: கம்பீர், ஹர்பஜன் எவ்வளவோ சொன்னாங்க.. கொஞ்சம் கூட கேட்காமல் தோற்றுப்போய் தொடரைவிட்டு வெளியேறிய இந்தியா

By karthikeyan V  |  First Published Nov 10, 2022, 10:50 PM IST

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அஷ்வினுக்கு பதிலாக சாஹலை ஆடவைக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர், ஹர்பஜன் சிங் ஆகியோர் வலியுறுத்திவந்த நிலையில், அதை செய்யாததும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
 


டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கபட்ட இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

பும்ரா, ஜடேஜா ஆகிய 2 முக்கியமான பெரிய வீரர்கள் காயத்தால் ஆடாதபோதிலும், அதெல்லாம் அணியின் வெற்றியை பாதிக்காதவகையில், சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.

Latest Videos

undefined

T20 WC: அரையிறுதியில் படுதோல்வி.. உடைந்து அழுத ரோஹித்: தட்டிக்கொடுத்து தேற்றிய ராகுல் டிராவிட்! வைரல் வீடியோ

அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடிக்க, 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்துஅணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ்பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவருமேஅடித்துவிட்டனர். இந்திய அணியால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இந்த தொடரில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் பும்ரா இல்லாதபோதிலும் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டது. ஆனால் ஸ்பின் பவுலிங் தான் மிகப்பெரிய பலவீனமாக இருந்தது. அஷ்வின் இந்த தொடரில் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியதுடன், அதிகமான ரன்களையும் வாரி வழங்கிவந்தார். சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 6 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அதில் 3 விக்கெட் ஜிம்பாப்வேவுக்கு எதிராகவீழ்த்தியது. ஜிம்பாப்வே வீரர்களின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தவில்லை. அவர்களாகவே தவறுசெய்து விக்கெட்டுக்கு தகுதியில்லாத பந்துக்கெல்லாம் விக்கெட்டை பறிகொடுத்து சென்றனர் என்பது அஷ்வினுக்கே தெரியும்.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் பவர்ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவார்கள். மிடில் ஓவர்களில் ரன்னை கட்டுப்படுத்தி 2-3 விக்கெட் வீழ்த்தி கொடுக்க வேண்டியதுதான் ஸ்பின்னர்கைன் கடமை. அந்த கடமையை அஷ்வின் சரியாக செய்யவில்லை. அஷ்வின் பவுலிங் எடுபடவில்லை. அவர் திணறுகிறார் என்பதை கண்ட ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர் ஆகியோர் அஷ்வினுக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹலை ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் சாஹலுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆடம் ஸாம்பா, அடில் ரஷீத், ஷதாப் கான், ரஷீத் கான், இஷ் சோதி, வனிந்து ஹசரங்கா, ஷம்ஸி என அனைத்து அணிகளிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இந்த உலக கோப்பையில் ஜொலித்தனர். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை என்பதால் சாஹல் தூக்கிப்போட்டு பேட்ஸ்மேனைஅடிக்கவைத்து விக்கெட் வீழ்த்தி கொடுக்கக்கூடியவர். எனவே அவரை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவருக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை.

T20 WC: அரையிறுதியில் இந்தியாவின் படுதோல்விக்கு இவங்கதான் காரணம்..! கேப்டன் ரோஹித் சர்மா பகிரங்க குற்றச்சாட்டு

இன்றைய அரையிறுதி போட்டியிலும் அஷ்வின் தான் ஆடினார். 2 ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கி விக்கெட்டும் வீழ்த்தவில்லை. இந்திய அணி படுதோல்வி அடைந்தது.  சாஹலை கண்டிப்பாகவே ஆடவைத்து முயற்சித்திருக்கலாம். அதை செய்ய இந்திய அணி நிர்வாகம் தவறிவிட்டது.

 

click me!