T20 WC: அரையிறுதியில் படுதோல்வி.. உடைந்து அழுத ரோஹித்: தட்டிக்கொடுத்து தேற்றிய ராகுல் டிராவிட்! வைரல் வீடியோ

By karthikeyan V  |  First Published Nov 10, 2022, 9:02 PM IST

டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இந்திய அணி தொடரைவிட்டு வெளியேறிய நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மனமுடைந்து சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில், தோளில் தட்டிக்கொடுத்து தேற்றினார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 


டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கபட்ட இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

பும்ரா, ஜடேஜா ஆகிய 2 முக்கியமான பெரிய வீரர்கள் காயத்தால் ஆடாதபோதிலும், அதெல்லாம் அணியின் வெற்றியை பாதிக்காதவகையில், சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.

Latest Videos

undefined

T20 WC: அரையிறுதியில் இந்தியாவின் படுதோல்விக்கு இவங்கதான் காரணம்..! கேப்டன் ரோஹித் சர்மா பகிரங்க குற்றச்சாட்டு

அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ராகுல்(5), ரோஹித்(28 பந்தில் 27 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (14) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். விராட் கோலி (40 பந்தில் 50 ரன்கள்) மற்றும் சூர்யகுமார் யாதவின் (33 பந்தில் 63 ரன்கள்) அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது இந்திய அணி.

169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி, விக்கெட்டை இழக்காமல் அவர்கள் இருவருமே ஆட்டத்தை முடித்துவிட்டனர். பட்லர் 49 பந்தில் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்தில் 86 ரன்களும் குவித்தனர். இவர்களது அதிரடியால் 16 ஓவரில் இலக்கை அடித்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோற்றது மரண அடி. 

இந்திய பவுலர்கள் சரியாக பந்துவீசவில்லை என்பதை போட்டிக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா வருத்தத்துடனும் அதிருப்தியுடனும் தெரிவித்தார். வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம். ஆனால் இந்திய அணி தோற்ற விதம் மிக மோசமானது.

T20 WC: இந்தியாவை ஊதித்தள்ளிய பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ்! 10 விக்கெட்டில் வென்று ஃபைனலுக்கு முன்னேறிய இங்கிலாந்து

இந்திய அணி தோல்வியடைந்ததும் கேப்டன் ரோஹித் சர்மா மிகுந்த வருத்தத்தில் இருந்தார். மனமுடைந்து கண்கள் கலங்கிவிட்டார். அவரது சோகத்தை கண்ட பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரோஹித்தின் தோளில் தட்டிக்கொடுத்து அவரை தேற்றினார். தனது கெரியரில் இதுமாதிரி பல தோல்விகளை சந்தித்துள்ள ராகுல் டிராவிட், வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்க்கும் பக்குவம் கொண்டவர். அந்தவகையில் ரோஹித்தை தேற்றிவிட்டு சீட்டிலிருந்து எழுந்து சென்றார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

pic.twitter.com/UJFyXywED3

— Guess Karo (@KuchNahiUkhada)
click me!