வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்த ஜாண்டி ரோட்ஸ்..! நெகிழ்ச்சி சம்பவம்

Published : Apr 14, 2022, 05:12 PM IST
வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்த ஜாண்டி ரோட்ஸ்..! நெகிழ்ச்சி சம்பவம்

சுருக்கம்

வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சச்சின் டெண்டுல்கரின் காலில் ஜாண்டி ரோட்ஸ் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசன் மும்பை இந்தியன்ஸுக்கு படுமோசமானதாக தொடங்கியுள்ளது. 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ஆடிய 5 போட்டிகளிலும் படுமோசமாக தோல்வியடைந்தது.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி மயன்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவானின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 198 ரன்களை குவித்தது. 199 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 186 ரன்கள் அடித்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொள்ளும்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரும் தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான ஜாண்டி ரோட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்தார்.

ஜாண்டி ரோட்ஸுக்கு 52 வயது; சச்சின் டெண்டுல்கருக்கு 48 வயது. சச்சின் டெண்டுல்கர் தன்னைவிட வயது குறைவானவர் தான் என்றாலும், கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் லெஜண்ட் கிரிக்கெட்டரான சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் தன்னைவிட பெரியவர் என்ற முறையில் சச்சின் டெண்டுல்கரின் காலில் ஜாண்டி ரோட்ஸ் விழுந்தார். ஆனால் அதை விரும்பாத சச்சின் டெண்டுல்கர், எவ்வளவோ கீழிறங்கி, ரோட்ஸின் கைகளை பிடித்து தடுக்க முயன்றார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!