முகமது அசாருதீனின் ஆல்டைம் சிறந்த உலக லெவன்..! சச்சின் - கங்குலி ஓபனிங்

Published : Apr 14, 2022, 04:37 PM IST
முகமது அசாருதீனின் ஆல்டைம் சிறந்த உலக லெவன்..! சச்சின் - கங்குலி ஓபனிங்

சுருக்கம்

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் மிகச்சிறந்த மற்றும் நேர்த்தியான 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார் முகமது அசாருதீன்.  

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவருமானவர் முகமது அசாருதீன். இந்திய அணிக்காக 1984ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டுவரை ஆடிய அசாருதீன், இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்து வழிநடத்தியுள்ளார்.

இந்தியாவிற்காக 99 டெஸ்ட் மற்றும் 334 ஒருநாள் போட்டிகளில் ஆடி 15 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார் அசாருதீன். 

அசாருதீன் மிகச்சிறந்த மற்றும் நேர்த்தியான ஆல்டைம் உலக லெவனை தேர்வு செய்துள்ளார். தனது ஆல்டைம் லெவனின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள அசாருதீன், 3ம் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் பிரயன் லாரா, 4ம் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக், 5ம் வரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் கோவர் ஆகியோரையும் 6ம் வரிசையில் இந்தியாவின் ஜிஆர் விஸ்வநாத்தையும் தேர்வு செய்துள்ளார்.

விக்கெட் கீப்பராக இந்தியாவின் சையத் கிர்மானியையும், ஆல்ரவுண்டர்கள் இயன் போத்தம், இம்ரான் கான், கபில் தேவுடன் 11வது வீரராக லெஜண்ட் ரிஸ்ட் ஸ்பின்னர் ஷேன் வார்னை தேர்வு செய்துள்ளார் அசாருதீன். 12வது வீரராக விவிஎஸ் லக்‌ஷ்மணை தேர்வு செய்துள்ளார்.

முகமது அசாருதீனின் ஆல்டைம் சிறந்த உலக லெவன்:

சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, பிரயன் லாரா, மார்க் வாக், டேவிட் கோவர், ஜிஆர் விஸ்வநாத், சையத் கிர்மானி(விக்கெட் கீப்பர்), இயன் போத்தம் இம்ரான் கான், கபில் தேவ், ஷேன் வார்ன்.

12வது வீரர் - விவிஎஸ் லக்‌ஷ்மண்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!