தாதாவின் அழைப்பையே புறக்கணித்த ரோஷக்கார வீரர்..! 18 ஆண்டுக்குப்பின் மனம் திறந்த முன்னாள் இந்திய வீரர்

By karthikeyan VFirst Published Jun 13, 2020, 7:00 PM IST
Highlights

தனது கருத்தை கேட்காமல் தனக்கு கட்டாய ஓய்வளித்த தேர்வாளர்கள் மீது இருந்த கோபத்தால், கங்குலி அழைத்தும் கூட இந்திய அணிக்காக ஆடாத சம்பவம் குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஜவகல் ஸ்ரீநாத். 
 

தனது கருத்தை கேட்காமல் தனக்கு கட்டாய ஓய்வளித்த தேர்வாளர்கள் மீது இருந்த கோபத்தால், கங்குலி அழைத்தும் கூட இந்திய அணிக்காக ஆடாத சம்பவம் குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஜவகல் ஸ்ரீநாத். 

இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஜவகல் ஸ்ரீநாத். 1991ம் ஆண்டிலிருந்து 2003ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக ஆடிய ஸ்ரீநாத், 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 236 விக்கெட்டுகளையும் 229 ஒருநாள் போட்டிகளில் ஆடி 315 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

2003ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையுடன் ஸ்ரீநாத் ஓய்வு பெற்றார். அந்த உலக கோப்பை தொடரில் 11 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் ஓய்வும் பெற்றார். 

இந்நிலையில், தனது விருப்பமே இல்லாமல் 2002 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனக்கு கட்டாய ஓய்வளித்ததால் கடும் அதிருப்தியில் இருந்த ஸ்ரீநாத், அதற்கடுத்த இங்கிலாந்து தொடருக்கு கங்குலி அழைத்தும் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

18 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ள ஜவகல் ஸ்ரீநாத், 2002 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு எனது விருப்பமே இல்லாமல் எனக்கு கட்டாய ஓய்வளித்தனர் தேர்வாளர்கள். பொதுவாக இதுமாதிரியான முடிவுகள் எடுக்கும் முன், ஒரு ஆலோசனை நடக்கும். நாமாக ஓய்வு வேண்டும் என்று ஒரு பிரேக் கேட்டால் மட்டுமே ஓய்வு அளிக்கப்படும். ஆனால் என்னிடம் அதுகுறித்து ஆலோசிக்காமல், எனது விருப்பத்தை கேட்காமல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் நான் இல்லை என்று கூறினார்கள். அதனால் நான் கடும் அதிருப்தியடைந்தேன். எனது கெரியர் மற்றவர்களின் கைகளில் இருப்பதையும், மற்றவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆடுவதையும் நான் விரும்பவில்லை.

அதனால் அதற்கடுத்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் நான் ஆடவில்லை. இங்கிலாந்து தொடரில் ஆட வருமாறு, அப்போதைய கேப்டன் கங்குலி என்னை அழைத்தார். ஆனால் அதிருப்தியில் இருந்த நான், என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போது நான் இங்கிலாந்தில் கவுண்டியில் தான் ஆடிக்கொண்டிருந்தேன். ஆனாலும் இந்திய அணிக்காக ஆட செல்லவில்லை. ஆனால் நான் இந்திய அணிக்காக ஆடியிருக்க வேண்டும். கொஞ்ச நாள் கழித்து அதிருப்தி சரியாகி, மீண்டும் இந்திய அணிக்காக ஆட முடிவெடுத்து, கம்பேக் கொடுத்தேன். 2003 உலக கோப்பையில் ஆட வேண்டும் என நினைத்தேன்.  எனது மரியாதையும் முக்கியம் என்பதால், நான் ஆட மறுத்ததற்காக வருந்தவில்லை என்று ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். 
 

click me!