சமகாலத்தின் பெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் லெவன்..! 2 சிறந்த வீரர்களை தேர்வு செய்யாததற்கு தெளிவான விளக்கம்

By karthikeyan VFirst Published Jun 13, 2020, 4:01 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக், தற்காலத்தின் பெஸ்ட் ஒருநாள் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்காத நிலையில், கிரிக்கெட் வீரர்கள், ஆல்டைம் உலக லெவன், தற்கால ஒருநாள் மற்றும் டெஸ்ட் லெவன், சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என பலவிதமான தேர்வுகளை செய்துவருகின்றனர்.

அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக், தற்காலத்தின் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்துள்ளார். 

சமகால ஒருநாள் கிரிக்கெட்டின் தொடக்க ஜோடியாக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம் விளாசியுள்ள ரோஹித் சர்மா, கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் 5 சதங்களை விளாசி சாதனை படைத்தார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் ரோஹித்தை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ள பிராட் ஹாக், அவரது ஓபனிங் பார்ட்னராக டேவிட் வார்னரை தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச்சும் கடந்த ஆண்டிலும், உலக கோப்பையிலும் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஆனால் அரைசதத்தை சதமாக மாற்றுவதில் அவர் பின் தங்கியிருப்பதால் அவரை தேர்வு செய்யவில்லை என்று பிராட் ஹாக்  விளக்கமளித்துள்ளார். 

மூன்றாம் வரிசை வீரராக விராட் கோலியை தவிர வேறு வீரரின் பெயரை யாருமே யோசிக்கமாட்டார்கள். எனவே, கோலியைத்தான் பிராட் ஹாக், மூன்றாம் வரிசை வீரராக தேர்வு செய்துள்ளார். இலக்கை விரட்டுவதில் வல்லவரும், ரன் மெஷினுமான கோலியை மூன்றாம் வரிசை வீரராக தேர்வு செய்ததுடன், அவரையே கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார் பிராட் ஹாக். நான்காம் வரிசையில் பாபர் அசாமை தேர்வு செய்துள்ளார். 

கேன் வில்லியம்சன் மிகச்சிறந்த வீரர்; அவரது பேட்டிங் சராசரி நன்றாக இருக்கிறது. ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பதால், அவரை அணியில் எடுக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார். ஆரோன் ஃபின்ச் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் இந்த அணியில் இடம்பெற தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ள பிராட் ஹாக், அதனால்தான் அவர்கள் இருவரையும் தேர்வு செய்யாததற்கான தெளிவான காரணத்தை தெரிவித்துள்ளார். 

ஆல்ரவுண்டராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸையும் விக்கெட் கீப்பராக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரையும் தேர்வு செய்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், லாக்கி ஃபெர்குசன் மற்றும் இந்தியாவின் முகமது ஷமி ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ள பிராட் ஹாக், ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

 

பிராட் ஹாக் தேர்வு செய்துள்ள சமகால கிரிக்கெட்டின் சிறந்த ஒருநாள் லெவனில் அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

பிராட் ஹாக் தேர்வு செய்த சமகால கிரிக்கெட்டின் சிறந்த ஒருநாள் லெவன்:

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி(கேப்டன்), பாபர் அசாம், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல்.
 

click me!