இந்தியாவின் மிக மூத்த கிரிக்கெட் வீரர் காலமானார்..! சச்சின் டெண்டுல்கர் இரங்கல்

Published : Jun 13, 2020, 02:09 PM IST
இந்தியாவின் மிக மூத்த கிரிக்கெட் வீரர் காலமானார்..! சச்சின் டெண்டுல்கர் இரங்கல்

சுருக்கம்

100 வயதான, இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி, இன்று காலமானார்.  

100 வயதான, இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி, இன்று காலமானார்.

1940ம் ஆண்டுகளில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடினார் வசந்த் ராய்ஜி. அவரது 13வது வயதிலேயே கிரிக்கெட் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார். வலது கை பேட்ஸ்மேனான வசந்த் ராய்ஜி, 9 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 277 ரன்கள் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 68.

வசந்த் ராய்ஜி, இந்த ஆண்டுதான் 100 வயதை எட்டினார். அவரது 100வது பிறந்தநாளில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆகியோர் அவரை நேரில் சந்தித்தனர்.

இந்தியாவின் மிக மூத்த கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி, இன்று அதிகாலை 2 மணியளவில் வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவருக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் பல கிரிக்கெட் வீரர்களும் வசந்த் ராய்ஜியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?