இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரது விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் ஜஸ்ப்ரித் பும்ரா. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். தற்போது வரையில் 32 டெஸ்ட் (இங்கிலாந்து டெஸ்டுக்கு முன்னதாக) போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 140 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 146 விக்கெட்டுகள் கைப்பற்றி அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரது விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்கள் குவித்தது. இதில், பும்ரா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.
2ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 420 ரன்கள் குவித்தது. இதில், ஆலி போப் அதிகபட்சமாக 190 ரன்கள் குவித்து 10 ரன்களில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை பும்ராவால் கோட்டைவிட்டார். இதில், பும்ரா பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட் மற்றும் ரெஹான் அகமது ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலமாக, மொத்தமாக 6 விக்கெட்டுகள் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 146 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மேலும், 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 183 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 155 விக்கெட்டுகளும் கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களில் இடம் பெற்றிருந்தனர். ஹர்பஜன் சிங் 144 விக்கெட்டுகளும், அனில் கும்ப்ளே 144 விக்கெட்டுகளும் கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களில் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் தான் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரது சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா முறியடித்துள்ளார்.