ஜேசன் ஹோல்டரின் ஆல்டைம் டெஸ்ட் லெவன்..! சச்சின், டிராவிட் இல்ல.. ஒரேயொரு இந்திய வீரருக்கு மட்டுமே இடம்

By karthikeyan VFirst Published Nov 23, 2021, 10:16 PM IST
Highlights

ஜேசன் ஹோல்டர் தனது சிறந்த ஆல்டைம் டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த லெவனை முன்னாள், இந்நாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் தனது ஆல்டைம் டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.

தனது ஆல்டைம் டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதங்களை விளாசிய அதிரடி தொடக்க வீரர்களான கிறிஸ் கெய்ல் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹோல்டர்.

3ம் வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கையும், 4ம் வரிசையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் அடித்த ஒரே வீரரான பிரயன் லாராவையும் தேர்வு செய்துள்ளார் ஜேசன் ஹோல்டர்.

5ம் வரிசை வீரராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸையும், ஆல்ரவுண்டராக கார்ஃபீல்டு சோபர்ஸையும்,  விக்கெட் கீப்பராக ஆடம் கில்கிறிஸ்ட்டையும் தேர்வு செய்துள்ளார்.

இந்த அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த (15921) கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரையும், ஆல்டைம் சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவரான ராகுல் டிராவிட்டையும் புறக்கணித்துள்ளார் ஹோல்டர்.

ஸ்பின்னராக ஷேன் வார்னையும், ஃபாஸ்ட் பவுலர்களாக கர்ட்லி ஆம்ப்ரூஸ், மால்கம் மார்ஷல் மற்றும் வாசிம் அக்ரம் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார் ஹோல்டர். இந்த அணியில் ஒரேயொரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
    
ஜேசன் ஹோல்டரின் ஆல்டைம் டெஸ்ட் லெவன்:

கிறிஸ் கெய்ல், வீரேந்திர சேவாக், ரிக்கி பாண்டிங், பிரயன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ், கார்ஃபீல்டு சோபர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட் (விக்கெட் கீப்பர்), ஷேன் வார்ன், கர்ட்லி ஆம்ப்ரூஸ், மால்கம் மார்ஷல், வாசிம் அக்ரம்.
 

click me!