India vs New Zealand இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் மாபெரும் அஸ்திரத்தை கையில் எடுத்த நியூசி! உத்தேச ஆடும் 11

By karthikeyan VFirst Published Nov 23, 2021, 9:07 PM IST
Highlights

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் களமிறங்கும் நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடரை நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி 3-0 என வென்றது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி முதல் கான்பூரில் நடக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3 முதல் மும்பை வான்கடேவில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் தான் களமிறங்கும். இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்துவது எந்த அணிக்குமே எளிதான காரியமல்ல. அந்தவகையில், இந்திய ஸ்பின்னர்களை மீறி இந்திய அணியை இந்தியாவில்  வீழ்த்துவது நியூசிலாந்துக்கு பெரும் சவாலான காரியம்.

ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ஸ்பின் தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் அஸ்திரம். அந்தவகையில், அதை நன்கறிந்த நியூசிலாந்து அணி, இந்திய கண்டிஷனுக்கு ஏற்ப திட்டங்களை வகுத்திருக்கிறது என்பதை நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட்டின் பேச்சிலிருந்தே அறிய முடிந்தது.

இந்தியாவில் வழக்கமான 4 ஃபாஸ்ட் பவுலர்கள் - ஒரு பார்ட் டைம் ஸ்பின்னர் என்ற மரபார்ந்த டெஸ்ட் காம்பினேஷன் செட் ஆகாது. இந்தியாவில் 3 ஸ்பின்னர்களுடன் ஆடவேண்டும் என்று கேரி ஸ்டெட் தெரிவித்திருந்தார். எனவே கான்பூரில் நடக்கும் முதல் டெஸ்ட்டில், நியூசிலாந்து அணி 3 ஸ்பின்னர்களுடன் ஆடும் என்று எதிர்பார்க்கலாம். 

இந்திய அணியும் கூட அஷ்வின், அக்ஸர், ஜடேஜா ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் தான் ஆடும். அந்தவகையில், நியூசிலாந்து அணியும் கண்டிப்பாக 3 ஸ்பின்னர்களுடன் தான் ஆடும்.  நியூசிலாந்து அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடுவார். 4ம் வரிசையில் நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர் ரோஸ் டெய்லரும், 5ம் வரிசையில் ஹென்ரி நிகோல்ஸும், 6ம் வரிசையில் விக்கெட் கீப்பர் டாம் பிளண்டலும் ஆடுவார்கள்.

பவுலிங் யூனிட்டை பொறுத்தமட்டில் 3 ஸ்பின்னர்கள் ஆடுவது உறுதி. அந்தவகையில், அஜாஸ் படேல், மிட்செல் சாண்ட்னெர், ராச்சின் ரவீந்திரா ஆகிய 3 ஸ்பின்னர்களும், டிரெண்ட் போல்ட் மற்றும் கைல் ஜாமிசன் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களும் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 

உத்தேச நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), அஜாஸ் படேல், மிட்செல் சாண்ட்னெர், ராச்சின் ரவீந்திரா, கைல் ஜாமிசன், டிரெண்ட் போல்ட்.
 

click me!