IND vs NZ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் நியூசிலாந்தின் ஆடும் 11 காம்பினேஷன் இதுதான்! ஓபனா உடைத்து பேசிய கோச்

By karthikeyan VFirst Published Nov 23, 2021, 8:52 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடரை நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி 3-0 என வென்றது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி முதல் கான்பூரில் நடக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3 முதல் மும்பை வான்கடேவில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் தான் களமிறங்கும். இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்துவது எந்த அணிக்குமே எளிதான காரியமல்ல. அந்தவகையில், இந்திய ஸ்பின்னர்களை மீறி இந்திய அணியை இந்தியாவில்  வீழ்த்துவது நியூசிலாந்துக்கு பெரும் சவாலான காரியம்.

ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ஸ்பின் தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் அஸ்திரம். அந்தவகையில், அதை நன்கறிந்த நியூசிலாந்து அணி, இந்திய கண்டிஷனுக்கு ஏற்ப திட்டங்களை வகுத்திருப்பதுடன், ஆடும் லெவன் காம்பினேஷனையும் தீர்மானித்திருக்கிறது என்பதை அந்த அணியின் பயிற்சியாளர் பேசுவதிலிருந்து அறிய முடிகிறது.

இதுகுறித்து பேசியுள்ள நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், இந்தியாவில் மற்ற அணிகள் வந்து ஆடும்போது வெற்றி பெறுவதில்லை. அது ஏன் என்பதை ஆராய்ந்தறிய வேண்டும். இந்தியாவில் ஆடுவது கடும் சவால். டெஸ்ட் கிரிக்கெட்டை அதன் பாரம்பரியமான முறையில் ஆடுவதை போல் 4 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னர் என்ற காம்பினேஷனுடன் இந்தியாவில் ஆடமுடியாது. இந்த டெஸ்ட்டில் 3 ஸ்பின்னர்கள் வரை ஆடுவதை பார்க்கலாம். ஆனால் அதை ஆடுகளத்தை பார்த்தபின்னர் தான் முடிவு செய்யமுடியும்.

நியூசிலாந்து அணியை பொறுத்தமட்டில், வழக்கமாக ஆடும் ஃபார்முலாவை மாற்றி ஆடும் அதேவேளையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான அடிப்படை விஷயங்களையும் பின்பற்ற வேண்டும் என்று கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
 

click me!