India vs New Zealand முதல் டெஸ்ட்: 2 வீரர்கள் அறிமுகம்.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Nov 23, 2021, 7:31 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடரை நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி 3-0 என வென்றது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி முதல் கான்பூரில் நடக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3 முதல் மும்பை வான்கடேவில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் தான் களமிறங்கும். இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்துவது எந்த அணிக்குமே எளிதான காரியமல்ல. அந்தவகையில், இந்திய ஸ்பின்னர்களை மீறி இந்திய அணியை இந்தியாவில்  வீழ்த்துவது நியூசிலாந்துக்கு பெரும் சவாலான காரியம்.

இந்த போட்டியில் விராட் கோலி ஆடாததால் அஜிங்க்யா ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கேஎல் ராகுலும் காயத்தால் தொடரைவிட்டு விலகிவிட்டார். எனவே மயன்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் புஜாரா, 5ம் வரிசையில் கேப்டன் ரஹானே. 4ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிராத ஷ்ரேயாஸ் ஐயர், இந்த போட்டியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருடன் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்தும் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பண்ட் இந்த தொடரில் ஆடாததால், சீனியர் விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா மற்றும் வளர்ந்துவரும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சீனியர் வீரரான சஹாவை ஆடவைக்காமல், வளர்ந்துவரும் வீரரான பரத்தை ஆடவைப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. மேலும், சஹாவைவிட பரத் நல்ல பேட்ஸ்மேன் என்றவகையிலும், அவருக்கான வாய்ப்புதான் அதிகம்.

பவுலிங் காம்பினேஷனை பொறுத்தமட்டில் இந்திய அணி 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 ஃபாஸ்ட் பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் தான் ஆடும். அந்தவகையில் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய 3 ஸ்பின்னர்கள் மற்றும் இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகிய 2 ஃபாஸ்ட் பவுலர்கள் என்ற பவுலிங் யூனிட்டுடன் களமிறங்க வாய்ப்புள்ளது.

உத்தேச இந்திய அணி:

மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
 

click me!