இந்திய அணிக்கு ஒரு மைனஸ் இருக்கு.. அத யூஸ் பண்ணி அடிச்சு நொறுக்குங்க!! தென்னாப்பிரிக்க அணிக்கு முன்னாள் ஆல்ரவுண்டரின் அதிரடி ஆலோசனை

By karthikeyan VFirst Published Jun 5, 2019, 9:42 AM IST
Highlights

முதல் போட்டியிலேயே வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணியும் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும் இன்று மோதுகின்றன. 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

தென்னாப்பிரிக்க அணிக்கு இது மூன்றாவது போட்டி. இதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக ஆடிய 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. முதல் 2 போட்டிகளிலும் தோற்று படுமோசமாக உலக கோப்பை தொடரை தொடங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இந்திய அணியை இன்று எதிர்கொள்கிறது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியை வீழ்த்துவது தென்னாப்பிரிக்க அணிக்கு எளிதான காரியம் அல்ல. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான அணியாக திகழும் அதேவேளையில் தென்னாப்பிரிக்க அணி வலுவிழந்துள்ளது. காயம் காரணமாக அனுபவ ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் தொடரிலிருந்து விலகியுள்ளார். இங்கிடி காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. பவுலிங் தான் தென்னாப்பிரிக்க அணியின் பெரிய பலமாக இருந்த நிலையில், ஸ்டெய்னும் இங்கிடியும் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்பு. 

முதல் போட்டியிலேயே வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணியும் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும் இன்று மோதுகின்றன. அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை ஆடிவிட்ட நிலையில், இன்றுதான் இந்திய அணி முதல் போட்டியில் ஆடுகிறது. 

தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் ஆடியுள்ளது. அதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு பெரியளவில் பதற்றம் இருக்காது. ஆனால் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். இந்திய அணி முதல் போட்டியில் ஆடுவதால் சற்று பதற்றத்துடன் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்திய அணியின் முதல் போட்டி பதற்றத்தை பயன்படுத்தி இந்திய அணியை தென்னாப்பிரிக்கா வீழ்த்தலாம் என ஜாக் காலிஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.  
 

click me!