கோபமா பொறாமையா..? சீனியர் வீரரை எப்போதுமே ஒதுக்கும் மிஸ்பா உல் ஹக்.. இவரு சொல்லிட்டா நடந்துருமா என்ன..?

By karthikeyan VFirst Published Jun 3, 2019, 4:27 PM IST
Highlights

பாகிஸ்தான் அணி முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. 
 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. 

இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. 

தொடர் தோல்விகளிலிருந்து மீளும் முனைப்பில் பாகிஸ்தான் அணி ஆடிவருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹாரிஸ் சொஹைலுக்கு பதிலாக ஷோயப் மாலிக்கும் இமாத் வாசிமிற்கு பதிலாக ஆசிஃப் அலியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்னதாக, அந்த போட்டிக்கான தனது பிளேயிங் லெவனை அறிவித்தார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக். அதில் 20 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஷோயப் மாலிக்கை அவர் தேர்வு செய்யவில்லை. முதல் போட்டியில் அவர் ஆடவும் இல்லை. இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் இந்த போட்டிக்கு முன்னதாக, இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வு செய்த மிஸ்பா, இந்த போட்டியிலும் மாலிக்கை தேர்வு செய்யவில்லை. 

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மாலிக் ஆடுகிறார். மாலிக் மீது மிஸ்பாவிற்கு கோபமா? அல்லது தனக்கு முன் பாகிஸ்தான் அணியில் அறிமுகமாகி தன்னுடன் ஆடி, பின்னர் தான் ஓய்வு பெற்றபிறகும் மாலிக் ஆடுகிறாரே என்ற பொறாமையா? என்று தெரியவில்லை. தொடர்ச்சியாக மாலிக்கை ஒதுக்குகிறார் மிஸ்பா. ஆனால் அவர் ஒதுக்குவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. 
 

click me!