போன மேட்ச்ல ஸ்டோக்ஸ்.. இந்த மேட்ச்ல வோக்ஸ்!!

Published : Jun 03, 2019, 05:10 PM IST
போன மேட்ச்ல ஸ்டோக்ஸ்.. இந்த மேட்ச்ல வோக்ஸ்!!

சுருக்கம்

36 ரன்களில் ஃபகார் ஜமான், மொயின் அலியின் சுழலில் பட்லரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். இதையடுத்து இமாம் உல் ஹக்குடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து கொண்டிருந்த இமாம் உல் ஹக், 44 ரன்களில் ஆட்டமிழந்தார். 

உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாட்டிங்காமில் நடந்துவருகிறது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகார் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். 

ஆனால் 36 ரன்களில் ஃபகார் ஜமான், மொயின் அலியின் சுழலில் பட்லரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். இதையடுத்து இமாம் உல் ஹக்குடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து கொண்டிருந்த இமாம் உல் ஹக், 44 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயின் அலியின் பந்தை  இமாம் உல் ஹக் எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடிக்க, லாங் ஆஃபில் நின்ற கிறிஸ் வோக்ஸ், ஓடிச்சென்று அபாரமாக அதை கேட்ச் செய்தார். உலக கோப்பை தொடரின் மற்றுமொரு அபாரமான கேட்ச் இது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டீப் மிட் விக்கெட்டில் ஸ்டோக்ஸ் ஓர் அபாரமான கேட்ச்சை பிடித்தார். இந்நிலையில், இன்றைய போட்டியில் வோக்ஸ் அபாரமான ஒரு கேட்ச்சை பிடித்துள்ளார். பேட்டிங், பவுலிங்கை கடந்து ஃபீல்டிங்கிலும் இங்கிலாந்து அணி மிரட்டுகிறது. 

அடித்து ஆடிய தொடக்க ஜோடியை இங்கிலாந்து அணி வீழ்த்திவிட்ட நிலையில், பாபர் அசாமும் முகமது ஹஃபீஸும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!