ஜடேஜா தான் எனக்கு பிடித்த வீரர்.. எனது முன்னோடியும் அவர் தான்.. ஆஸ்திரேலியாவின் ஹாட்ரிக் நாயகன் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 22, 2020, 3:01 PM IST
Highlights

ஜடேஜா தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றும் அவரை மாதிரி ஆக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் அஷ்டன் அகர் தெரிவித்துள்ளார். 
 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது. 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. 

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 196 ரன்களை குவித்தது. 197 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணியை அஷ்டன் அகரின் அபாரமான பவுலிங்கால் 89 ரன்களில் சுருட்டிய ஆஸ்திரேலிய அணி, 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அஷ்டன் அகர் ஹாட்ரிக் விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 8வது ஓவரின் 4,5 மற்றும் 6வது பந்துகளில் முறையே, டுப்ளெசிஸ், ஃபெலுக்வாயோ மற்றும் டேல் ஸ்டெய்னை வீழ்த்தினார். ஹாட்ரிக்குடன் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்டன் அகர் தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங்கிலும் அவர் பங்களிப்பு செய்திருந்தார். 

போட்டிக்கு பின்னர் பேசிய அஷ்டன் அகர், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றும் அவர்தான் தனது முன்னோடி என்றும் அவரைப்போன்ற ஆல்ரவுண்டராக உருவாக வேண்டும் என்றும் அகர் தெரிவித்துள்ளார். 

Also Read - ரஹானேவுக்கு கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்த ரிஷப் பண்ட்.. முதல் சம்பவம்.. வீடியோ

இதுகுறித்து பேசிய அகர், இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு பின்னர், ஜடேஜாவுடன் நீண்ட நேரம் பேசினேன். அருமையான உரையாடல் அது. உலகிலேயே எனக்கு ரொம்ப பிடித்த கிரிக்கெட் வீரர் ஜடேஜா தான். அவரை மாதிரியே கிரிக்கெட் ஆட விரும்புகிறேன். அவர் ராக்ஸ்டார். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலுமே சிறந்தவர். பந்தை அருமையாக சுழற்றுவார் ஜடேஜா. அதேபோல பேட்டிங்கும் பாசிட்டிவான மனநிலையுடன் ஆடுவார். ஃபீல்டிங்கில் சொல்லவே தேவையில்லை. அருமையான ஃபீல்டர் என்று ஜடேஜாவை அகர் புகழ்ந்து தள்ளியுள்ளார். 

click me!