ரஹானேவுக்கு கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்த ரிஷப் பண்ட்.. முதல் சம்பவம்.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 22, 2020, 1:09 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானேவுக்கு கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்துள்ளார் ரிஷப் பண்ட். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானே இதுவரை செய்யாதிருந்த ஒரு காரியத்துக்கு அவரை சொந்தக்காரராக்கினார் ரிஷப் பண்ட். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 165 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இந்திய அணியில் யாருமே சரியாக ஆடவில்லை. ரஹானே மட்டும் முடிந்தவரை போராடினார். புஜாரா, கோலி ஆகிய நட்சத்திர வீரர்கள் சரியாக ஆடாததால் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வால் முறையே 16 மற்றும் 34 ரன்களில் ஆட்டமிழந்தனர். புஜாராவை 11 ரன்களிலும் கோலியை 2 ரன்னிலும் ஹனுமா விஹாரியை 7 ரன்னிலும் கைல் ஜேமிசன் வீழ்த்தினார். அறிமுக போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி புஜாரா, கோலி, விஹாரி ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ரஹானே மட்டும் ஒருமுனையில் நிலைத்து ஆடினார். முதல் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனில் மழை குறுக்கிட்டதால் 55 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 122 ரன்கள் அடித்திருந்தது. ரஹானே 38 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்ட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அஜாஸ் படேல் அவரை ரன் அவுட் செய்தார். 132வது ரன்னில் 5வது விக்கெட்டை இழந்த இந்திய அணி, 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரஹானேவிற்கு மறுமுனையில் யாருமே ஒத்துழைப்பு கொடுக்காததால் அவரும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ரஹானேவும் ரிஷப் பண்ட்டும், அங்கு அடித்த காற்று மற்றும் நியூசிலாந்தின் ஃபாஸ்ட் பவுலிங் ஆகிய இரண்டையும் சமாளித்து ஆடினர். ஆனால் இன்னிங்ஸின் 59வது ஓவரில் ரிஷப் பண்ட் ரன் அவுட்டான பின்னர் தான் ஆட்டம் மாறியது. சௌதி வீசிய பந்தை ஆஃப் திசையில் அடித்து விட்டு ரஹானே ரன் ஓடினார். ஆனால் அதற்கு ரன் ஓட தயக்கம் காட்டிய ரிஷப் பண்ட், ரஹானே உறுதியுடன் ஓடிவந்ததால், வேறு வழியின்றி ஓடி ரன் அவுட்டானார். ரஹானே, அதற்கு ரன் ஓடியது சரியானதுதான். ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்து ரிஷப் பண்ட் வேகமாக ஓடியிருந்தால் அந்த ரன்னை ஓடியிருக்கலாம். ஆனால் ரஹானே, நம்பிக்கையுடன் ஓடிவந்தும் கூட, ரிஷப் பண்ட் ரன் ஓட தயக்கம் காட்டிவிட்டு சற்று தாமதமாக ஓடியதால் தான் ரன் அவுட்டானார். 

ஏனெனில் அந்த பந்தை ஃபீல்டர் ஓடிவந்து பிடிக்க வேண்டிதான் இருந்தது. அதனால் தயங்காமல் ஓடியிருந்தால் ரிஷப் ஓடியிருக்கலாம். அந்த பந்தை பிடித்த அஜாஸ் படேல் நேரடியாக ஸ்டம்பில் அடித்து ரிஷப்பை ரன் அவுட் செய்தார். அதன்பின்னர் தான் எஞ்சிய விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ரஹானே ரன் அவுட் சம்பவத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னர், ரஹானேவும் ரன் அவுட் ஆனதில்லை. ரஹானேவுடன் இணைந்து ஆடிய எந்த வீரரும் ரன் அவுட் ஆனதில்லை. அந்தளவிற்கு தெளிவாக யோசித்து ரன் ஓடக்கூடியவர். இந்த முறையும் அவர் ரன் ஓட எடுத்த முடிவு சரியானதுதான். ரிஷப் பண்ட் காட்டிய தயக்கமே அவரது ரன் அவுட்டுக்கு காரணமே தவிர, ரஹானே அல்ல. 

இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனும் டெய்லரும் பொறுப்புடன் ஆடி ஸ்கோர் செய்தனர். வில்லியம்சன் 89 ரன்களும் டெய்லர் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்துள்ளது. 
 

click me!