எப்பேர்ப்பட்ட வீரர் தெரியுமா அவரு..? அவரோட அருமை தெரியாமல் ஒதுக்குனா இழப்பு உங்களுக்குத்தான்.. இந்திய அணியை தெறிக்கவிடும் ஜாக் காலிஸ்

By karthikeyan VFirst Published Apr 13, 2019, 11:55 AM IST
Highlights

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் ஆகிய அனைத்து இடங்களும் வலுவாக உள்ளது. உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இடம்பெறும் ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் உள்ளனர்.
 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி உள்ளது. 

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் ஆகிய அனைத்து இடங்களும் வலுவாக உள்ளது. உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இடம்பெறும் ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் உள்ளனர்.

நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய இடங்களுக்கு யார் தேர்வு செய்யப்பட போகிறார்கள் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட அணி வரும் 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு சொதப்பியதால் அந்த இடத்திற்கு யார் தேர்வாகப்போகிறார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. நான்காம் வரிசை வீரருக்கான பரிந்துரையை பல முன்னாள் ஜாம்பவான்களும் அளித்துவருகின்றனர். 

அதேபோல மாற்று விக்கெட் கீப்பராக சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இளம் வீரர் ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யார் தேர்வாகப்போகிறார்கள் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடரில் தினேஷ் கார்த்திக் கழட்டிவிடப்பட்டு ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த செயல், தினேஷ் கார்த்திக்கிற்கு உலக கோப்பை அணியில் இடமில்லை என்பதை பறைசாற்றுவதாக அமைந்தது. அதேநேரத்தில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பியதால் அவரது வாய்ப்பும் உறுதி செய்யப்படவில்லை. 

எனவே தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பது வரும் 15ம் தேதிதான் தெரியும். ஆனால் ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. அதனால் தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக உள்ளன. 

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜாக் காலிஸ், உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்கை எடுக்கவில்லை என்றால் இந்திய அணியின் மோசமான செயல் அதுவாக இருக்கும். நல்ல அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக், பொறுமையாகவும் நிதானமாகவும் சூழலுக்கு ஏற்ப செயல்படக்கூடியவர். உலக கோப்பையில் அவர் இருப்பது இந்திய அணிக்கு உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். அவரை 4ம் வரிசையில் இறக்கலாம் என்று காலிஸ் தெரிவித்துள்ளார். 
 

click me!