IPL 2023: இதெல்லாம் ஜூஜூபி ஸ்கோர்; 180, 190 அடித்தால் தான் டஃப் கொடுக்க முடியும்: டேவிட் வார்னர்!

By Rsiva kumar  |  First Published Apr 5, 2023, 3:27 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான தோல்விக்குப் பிறகு பேசிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 189, 190 ரன்கள் அடித்தால் தான் கொஞ்சம் டஃப் கொடுக்க முடியும் என்று பேசியுள்ளார்.
 

It will very difficult if you score very low said Delhi Capitals David Warner after loss against Gujarat Titans in Delhi Match

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 7 ரன்களுக்கும், மிட்செல் மார்ஷ் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

14 மணி நேரமாக போடப்பட்ட விராட் கோலியின் புதிய டாட்டூ ரகசியத்தை உடைத்த டாட்டூ கலைஞர்!

Latest Videos

நிதானமாக நின்று ஆடிய டேவிட் வார்னரும் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரைலீ ரூசோ ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். சர்ஃபராஸ் கான் 30 ரன்களும், அக்‌ஷர் படேல் 36 ரன்களும் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2023: மும்பைக்கு எதிராக சரவெடியாக வெடித்த விராட் கோலிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசு!

தோல்விக்குப் பிறகு பேசிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியிருப்பதாவது: குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீச்சினார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே விளையாடினார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி விளையாட வேண்டும் என்று எங்களுக்கு காட்டினார்கள். இன்னும் 6 போட்டிகள் இந்த மைதானத்தில் நட்கக இருக்கிறது. சாய் சுதர்சன் நன்றாக பேட்டிங் ஆடினார். டேவிட் மில்லர் தனது பணியை சிறப்பாக செய்து முடித்தார் குறைந்தது 180 முதல் 190 ரன்கள் வரையில் அடிக்காவிட்டால் கஷ்டம் தான். அப்படி அடித்திருந்தால் போட்டி கடுமையானதாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

IPL 2023: தனது அணி விளையாடும் போட்டியை கண்டு ரசித்த ரிஷப் பண்ட்!

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் தனது 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் தனது 2ஆவது தோல்வியை பதிவு செய்துள்ளது. ரிஷப் பண்ட் இல்லாதது பெரிய குறையாகவே இன்னும் பார்க்கப்படுகிறது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image